First
பெண்கள் தின சிறப்பு கல்வெட்டு பதிவு: அகம்படி நங்கை கல்வெட்டு
—————————————————–
அகம்படிய இன பெண்கள் மற்றும் மற்ற பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
மகளிர் தினமான இன்று சிறப்புப்பதிவாக அகம்படி நங்கை கோவிலுக்கு விளக்கு எரிய தானம் அளித்த கல்வெட்டு செய்தியை காண இருக்கின்றோம்.
செஞ்சியில் உள்ள சிவன் கோவிலின் நடுசன்னதியின் தெற்கு சுவற்றில் உள்ள கல்வெட்டு செய்தியில் மூலம் கீழ்கண்ட தகவல் காணக்கிடைக்கின்றது.
திருபுவன சக்கரவர்த்திகள் விக்ரமசோழ தேவரின் 10ம் ஆட்சியாண்டின் போது (கி.பி 1128ம் ஆண்டு அல்லது கி.பி 1132)
மனவில் கோட்டத்தில் அமைந்துள்ள மனவில் நாட்டு செஞ்சியில் உள்ள ஜெயமதீஸ்வரம் உடைய மகாதேவர் கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்க அகம்படி நங்கை என்பவரிடமிருந்து சிவபிராமணர்கள் காசுகள் பெற்றுக்கொண்ட செய்தி பதிவாகியுள்ளது.
இந்த அகம்படி நங்கையின் கணவர் கொற்றமங்களம் என்ற ஊருக்கு தலைவன் ஆவான். இவன் நடுவின்மலை பெருமூர் நாட்டுப்பிரிவை சேர்ந்த வெண்பாக்கம் எனும் கிராமத்தில் வசித்துள்ளான் என்பது இந்த கல்வெட்டு குறிப்புகள் வழி தெரியும் செய்தியாகும்.
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை 1939-1940. கல்வெட்டு எண் 159
மேலும் சில தகவல்கள்
———————-
வடவாயிற்செல்வி என்பது கொற்றவை என்ற போர்கடவுளின் மற்றோரு பெயராகும். இன்று கொற்றவை தெய்வமானது துர்க்கை என்ற பெயரில் வணங்கப்படுகிறது. இன்றும் கூட காஞ்சிபுரம் பகுதிகளில் வடவாயிற்செல்வி என்ற பெயரில் பல கோவில்கள் அமைந்துள்ளன.
இக்கல்வெட்டில் வரும் அகம்படி நங்கையின் கணவனின் பெயரான “வடவாயிற்செல்வன்” என்பது போர்கடவுளான கொற்றவையை நினைவூட்டும் பெயராகும் . கல்வெட்டில் குறிப்பிட்ட வடவாயிற்செல்வன் என்பவன் “கொற்றமங்களம்” என்ற ஊரின் தலைவனாக இருந்தான் என்பது நம் கருத்தை மெய்பிக்கும் சான்றாக உள்ளது. சோழர்களின் கொற்றவையை போரில் வெற்றியடைய வழிபட்டனர் என்பதை வரலாறுகள் கூறுகின்றன. சோழர்களின் கல்வெட்டு செய்தியில் அகம்படி நங்கையின் கணவனான வடவாயிற்செல்வன் வருவதும் அவன் கொற்றமங்களம் எனும் ஊருக்கு தலைவனாக இருந்தான் என்பதும் ஆராயத்தக்கது.
மற்ற எந்த சாதியினரையும் விட அகம்படிய இன பெண்கள் நிரம்ப இடங்களில் தானம் வழங்கிய செய்திகளும் பெண் அதிகாரிகளாக(அதிகாரிச்சி) பணியாற்றிய செய்தி கல்வெட்டு செய்திகளில் வருகின்றது.
பெண்கள் தினத்திற்காக இது குறித்து சிறப்பு காணொளி வெளியிடலாம் என்று நினைத்தோம். வேலைப்பளு இதற்கு இடமளிக்கவில்லை.
விரைவில் அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் இது குறித்த விரிவான காணொளி வெளியாகும். நமது யுடிப் சேனலுக்கு இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சபஸ்கிரைப் செய்துகொள்ளவும்.
https://www.youtube.com/channel/UCI2KppF2iePnTNphjk6I78w
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்