வாட்ஸ்அப் குருப்களில் வரன் தேடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்!———————-…

Spread the love

வாட்ஸ்அப் குருப்களில் வரன் தேடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்!
——————————————-
அன்பிற்குரிய அகமுடையார் உறவுகளே!
உங்களிடத்தே மிக முக்கியமாக திருமண வரன் தேடலில் வாட்ஸ்அப் குருப்களில் நடந்து வரும் குழப்பங்களை பற்றி பேசபோகிறோம்.

இன்று சிலர் வாட்ஸ்அப் குருப்களில் திருமண வரன் தேடல் செய்துவருகிறார்கள். அதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும் விளைவுகள் சரியாக இருப்பதில்லை என்பதையும் வாட்ஸ்அப் குருப்களில் வரன் தேடுவது எவ்வளவு ஆபத்தானது அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதையும் விளக்குகின்றோம்.

அனுமதி பெறாமலே பதிவது -வாட்ஸ்குருப்களில் குருப் நடத்துபவர்கள் பெரும்பாலும் வேறு மேட்ரிமோனிகளிடமிருந்து ப்ரோபல்களை எடுத்து தங்களின் வாட்ஸ்அப் குருப்களில் வரன் பதிகிறார்கள். பதிவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறுவதில்லை.
இதனால் நம்பர் எடுத்து பேசுபவர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் நாங்கள் வரன் பதியவில்லையே ? யாருக்கு நம்பர் கொடுத்தார்கள் என்று பல கேள்வி எழுப்புவார்கள். அதுமட்டுமல்ல வாட்ஸ்அப் குருப் நடத்தும் பல பேர் வரனுக்கு திருமணம் முடிந்த பின்பும் அந்த வரன் தகவலை தொடர்ந்து குருப்களில் பதிவு செய்கிறார்கள்!

இடைத்தரகர்கள் பயன்படுத்துதல்- வாட்ஸ் குருப்களில் வரன் பதிவு செய்யும் போது எல்லோரும் எல்லா வரன் தகவல்களையும் பார்க்கும்படி இருப்பதால் இடைத்தரகர்கள் வரன் தகவல்களை எளிதாக எடுத்து விடுகின்றனர். மேலும் வரன் பதிவு கட்டணம், வரன் வீட்டை பார்க்க கட்டணம் ,வரன் அமைந்தால் கமிசன் தொகை என்று நச்சரிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் , ஒரு இடைத்தரகர் மூலமாக வரன் தகவல்கள் நூற்றுக்கணக்கான இடைத்தரகர்களிடம் வரன் தகவல்கள் புகைப்படத்துடன் சுற்றுகின்றன.

மாற்று சாதியினர் உள்நுழைதல்- வாட்ஸ்அப் குருப்களில் அகமுடையார்களே அவர்களுக்கு தெரிந்த ஆனால் அகமுடையார் சாதி அல்லாத மாற்று சமுதாய நண்பர்களை சேர்த்துவிடுகின்றனர்.சில குருப்களில் லிங்க் தெரிந்த யார் வேண்மென்றாலும் குருப்பில் இணைந்து கொள்ளலாம் என்பதால் மிக எளிதாக மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குருப்பில் இணைந்து அந்த வரன் வீட்டாரிடம் பேசி திருமண கலப்பை செய்ய முயற்சி செய்கிறார்கள்.

திருமணம் முடிந்த பின்னரும் பதிவு செய்யப்படுவது- ஒரு குருப்பை பார்த்து மற்றோரு குருப் என வரன்கள் தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு குருப்களில் சேர் செய்யப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட வரனிற்கு திருமணம் முடிந்திருந்தாலும் தொடர்ந்து அந்த தகவல் சேர் செய்யப்படுவதால் தேவையற்ற சங்கடங்களும் திருமண வாழ்வில் குழப்பங்களும் ஏற்படுகின்றன .

காலதாமதம்- வாட்ஸ் அப் குருப்களில் பிஇ போன்ற நல்ல படிப்புடன் 1 இலட்சத்திற்கு மேல் அதிக சம்பளத்துடன் இருக்கும் மணமகன்களுக்கு வரன்கள் எளிதாக கிடைத்து விடுகின்றது ஆனால் 40,000 , 50,0000 என சம்பளத்தில் உள்ளவர்களுக்கு கூட வரன்கள் எளிதாக கிடைப்பதில்லை. அதற்கும் கீழே சம்பளம் உள்ளவர்கள்,பிஇ படிப்புக்கு குறைவாக படித்தவர்கள் பலர் தங்களுக்கு ஏற்ற வரன் வரும் வரும் என காத்திருந்து மாதங்களையும், வருடத்தையும் வீணடித்து விடுகின்றனர்.

புதிய வரன்களே மீண்டும் மீண்டும் வருதல்- வாட்ஸ்அப் குருப்களில் குறிப்பிட்ட அளவில் ஜாதகம் இருக்காததால் பார்த்த வரன்களையே திரும்பி திரும்பி பதிவு செய்வார்கள். புதிய வரன்கள் அரிதாகவே வரும் இதிலும் காலதாமதம் ஆகின்றது.

தேடுதல் கடினம்- வாட்ஸ்அப் குருப்களில் வருகின்ற வரிசைப்படி தான் வரன்களை பார்க்க முடியும். குறிப்பிட்ட வயது அடிப்படையிலோ, குறிப்பிட்ட ஊர் தகவல்களையோ ,குறிப்பிட்ட வேலை அடிப்படியிலோ வரன்களை பார்த்து கண்டிபிடிக்கவோ முடியாது! எல்லா வரன்களையும் பார்க்க குருப்பில் பழைய வரன்களை மேலே சென்று பார்க்க வேண்டும் ஆனால் அவற்றில் உள்ள படங்கள் ,பிடிப் எப் பைலகள் பல காலம் முன்பு பதிவு செய்ததால் அது டெலிட் டெலிட் செய்யப்பட்டிருக்கும்.

மாற்று சமுதாயத்தினர் வரன் பதிவு செய்தல்- அகமுடையார் திருமண வரன் தேடுவதாக பெயர் வைத்துக்கொண்டு சில வாட்ஸ்அப் குருப்களில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த வரன்களை பதிகிறார்கள் அல்லது மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வரன்களை பதிய அனுமதிக்கிறார்கள்!

கலப்பு திருமணத்தினர் பதிவு செய்தல்- வாட்ஸ்குருப்களில் சில நேரங்களில் அகமுடையாரில் கலப்பு திருமண செய்தவர்களுக்கு பிறந்தவர்களின் வரன் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மாற்று சமுதாய தந்தைக்கு பிறந்த வரன்களின் தகவல்களை பதிவு செய்கின்றனர். ஆனால் இத்தகவலை வாட்ஸ்ப் குருப் நடத்துபவர்கள் உன்னிப்பாக கவனிப்பதில்லை .நாம் கவனித்து இதை குறிப்பிட்டாலும் வாட்ஸ் அப் குருப் நடத்துபவர்கள் நாம் குறிப்பிடுவதை நீக்குகிறார்களே தவிர அந்த வரன் பதிவை நீக்குவதில்லை. இதனால் வாட்ஸ்அப் குருப்கள் அகமுடையார் திருமண கலப்பு ஏற்படுத்துவதில் நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் உதவுகின்றன.

மேலே சொன்ன எல்லா விடயங்களும் நம்முடைய அனுபவத்தில் நாம் கண்ட உண்மைகள். இந்த வாட்ஸ்குருப்களில் நடக்கும் குளறுபடிகளை நாம் கண்ணார கண்டுள்ளோம். பல முறை அந்த குருப்பில் நடைபெற்வது அங்கேயே கண்டித்துள்ளோம். என்னிடமே ஆனால் அங்கு நடக்கும் விசயம் அங்கேயே முடிந்து விடுவதால் பெரிதாக யாருக்கும் வெளியே தெரியாததால் இதை பற்றிய பதிவை வெளியிட்டு நம் சமூகத்திற்கு விழிப்புனர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு!

அகமுடையார்மேட்ரி நடத்தும் நம்மிடமே மாற்று சாதியை சேர்ந்தவர்கள் சிலர் ஏன் இங்கு எங்களுக்கு வரன் பதிய மாட்டீர்களா என்று விவாதித்தது ,நமது சாதி பெண்கள் சில வரன்கள் மாற்று சாதியில் திருமணம் செய்து அவர்களுக்கு பிறந்த வரன்களுக்கு திருமண வரனை அகமுடையார் வாட்ஸ்அப் குருப்களில் வரன் தேட முயற்சிப்பது, மாற்று சாதியை சேர்ந்த பெண்கள் தாங்களே நமது அகமுடையாரில் வரன் தேட வந்தது, அதை கண்டித்த நம்மிடமே வந்து அந்த பெண் வந்து விவாதித்தது என்று பல விசயங்கள் நடந்துள்ளன. அவற்றை தேவைப்பட்டால் அவற்றை பற்றியும் தனிப்பதிவில் பதிவு செய்கின்றேன் ( அந்த பெண்ணின் தனிப்பட்ட தகவல்களை மறைத்து) பதிவு செய்வோம் (இது சமூகத்திற்கான எச்சரிக்கை பதிவு என்பதால் அதை அறிவுறுத்த வேண்டியது நமது கடமை!

இதுபோன்று வாட்ஸ்அப் குருப்களில் திருமண வரன் தேடுவதில் பல்வேறு சிக்கல் இருப்பதினால் தான் நாம் வாட்ஸ்அப் குருப் தொடங்காமல் பெரும் தொகை ,முயற்சி,உழைப்பு செய்து அகமுடையாருக்கு மட்டுமான அகமுடையார்மேட்ரி, அப்ளிகேசனை வெளியிட்டுள்ளோம்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo