First
சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் தேவை!
———————————————-
சில நாட்களுக்கு முன் மேலதிகாரியால் தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரி மல்லிகா ஈஸ்வரி சர்வேயர் அவர்களின் ஊரில் குராயூரில் நேரில் சென்று நிலவரத்தை விசாரித்து வந்தேன்!
கொலைவெறித் தாக்குதல் , வன்கொடுமை செய்த அந்த அதிகாரி மீது 15 நாட்களுக்குப் பின் பல்வேறு தரப்பு அழுத்தங்களுக்குப் பிறகு வெறுமனே ஒப்புக்கு சப்பாக முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளதாகத் தெரிகிறது.
தவறு செய்த அதிகாரி மீது முறையான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், தாக்குதல் தொடுத்தவரை கைது செய்யவும் நீதிமன்றத்தின் வழி அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்! இதற்கு நம் இன வழக்கறிஞர்கள் சரியான வழியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழிகாட்டிடுதல் வேண்டும். அல்லது மேற்கொண்டு இவ்விசயத்தில் எவ்விதத்தில் அழுத்தம் கொடுக்கலாம் என்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன!
பாதிக்கப்பட்டவரின் கணவரின் தொடர்பு எண்: ஐயனார்-7397008964 (சட்ட உதவி அல்லது வேறு ஆலோசனைகள் வழங்குபவர்கள் இவரை நேரடியாக தொடர்பு கொள்க!நன்றி!)
அதே வேளை அகமுடையார் இயக்கங்கள்,தனிப்பட்ட சமூக அக்கறையாளர்கள் இந்த விசயத்தில் அரசிற்கு அழுத்தம் கொடுக்க தகுந்த வகையில் தங்கள் ஊர்களில் நோட்டிஸ்,பேனர் மற்றும் ஊடகங்களில் இச்செய்தி வெளிவர உதவ வேண்டும்!
குறிப்பு:
அகமுடையார்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வருவதாலும் சரியான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் பிரச்சனைகள் தொடர்வதையும் கருத்தில் கொண்டு அனைத்து பதிவு பெற்ற அமைப்புகளையும் இணைத்து அகமுடையார் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி ஒர் சிறு பாலமாக பிரச்சனைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் இல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி மற்றும் நிரந்தர தீர்வு அளிக்கும் வேறு திட்டம் வகுக்கப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்