First
எம்மைக் கவர்ந்த மருதுபாண்டியர் சிற்பம்-திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்
———————————————————————
மருதுபாண்டியருக்கு பல்வேறு கோவில்களில் பல்வேறு வகையிலான சிலைகள் இருப்பினும் இக்கோவிலில் அமைந்துள்ள சிற்பம் மிகவும் சிறப்பு பெற்றது,தனித்துவமானது. தனிப்பட்ட முறையில் (அகமுடையார் ஒற்றுமை இணையதளம்) எம்மை மிகவும் கவர்ந்த மருதுபாண்டியர் சிற்பமும் இதுவே இதற்கு இரு காரணங்கள்.
ஒன்று: மருதுபாண்டியர்களின் சிலைகளிலேயே மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ள சிலை இது தான்!(பார்க்க : படம் 1)
தலையில் முன் கொண்டை
விரிந்த மற்றும் பெரிய கண்கள்
உதட்டு வரை நேராக சென்று பின் மேலேறும் மீசை
கழுத்தில் முத்து மாலை
கைகளில் தங்கக் காப்பு மறுகையில் வளையம்
இடுப்பில் வாள்
இடுப்பில் இருந்து பாதம் வரை ஆடை
என்று நேர்த்தியாக செதுக்கி மருதுபாண்டியர் எவ்வாறு இருந்திருப்பார் என்பதை மிகவும் நுணுக்கமாக நம் கண்முன்னே காட்டுகிறார் சிற்பி!இதனாலேயே மருதுபாண்டியர்களின் சிலைகளில் இது தனித்துவமான சிற்பமாக முன்னிற்கின்றது.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது அதே தூணில் பக்கவாட்டில் அமைந்துள்ள சிறிய ஆளுயுரச் சிற்பமாகும். (பார்க்க : படம் 2 )ஆம் அதே உருவ அமைப்பு ஆனால் சிறிய அளவிலானது அது யார்? அதுவும் பக்கவாட்டில் அமைந்துள்ளது அது ஏன்?
அது யாருமல்ல, மருதுபாண்டியரே தான் ? ஆனால் எதற்காக!
இறைவனை நோக்கி பார்க்கின்ற மருதுபாண்டியரின் உருவம் பெரியதாகவும்
அதே வேளை கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள்(அடியார்கள்) முன் சிறியவனாய்அவர்கள் வருகின்ற பாதையில் (வாயிற் பாதையில் ) அவர்களை வரவேற்கின்ற விதமாய் கரங்களைக் கூப்பி வரவேற்று நிற்கின்றார்.
முன்னே அறம் வளர்த்த ஆதிப் பாண்டியர்களைத் தாண்டி ஒருபடி மேலே போய் பின்னே இச் சிவகங்கைப் பாண்டியர் கோவிலுக்கு வரும் அடியார்களுக்கும் தான் அடியான் என்பதைச் சொல்லிக் காட்டி நிற்கின்றார்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் அடியார்க்கும் அடியேன்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்