First
நிரம்பி வழியும் மூடநம்பிக்கைகளும் ,சாதியக் கொடுமைகளும் ,ஏழை பணக்காரன் போன்ற இடைவெளிகளும் ,மக்கள் மத்தியில் அறியாமை பலவும் மிகுந்திருந்த அக்காலத்தில் (கி.பி 1801ல் ) ஆங்கிலேயர் இந்நாட்டின் அந்நியர் என்பதையும் ஆங்கிலேயர் செய்த பொருளாதாரச் சுரண்டலையும் வெளிப்படுத்தி.
அக்காலத்தில் எவரும் சிந்திக்காத வகையில் நம் நாடு ஏன் அடிமைப்பட்டது என்ற காரணத்தை தெளிவாக உணர்ந்து இந்நாட்டுமக்கள் சாதி மத துவேசங்களை மறந்து இந்த நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சுதந்திரப் பிரகடணம் வெளியிட்டு முதல் சுதந்திரப் போர் என்பதை அறிக்கையாகவே வெளியிட்டு விடுதலை வேள்வியை துவக்கியவர் மருதுபாண்டியர்.
வரலாற்றின் நீங்காத பக்கங்களில் இடம்பெற வேண்டிய இந்த மகத்தான நிகழ்வு வெகு சிலரைத் தவிர இங்கு எவருக்கும் தெரிந்திராத நிலையில் கிட்டத்தட்ட 216 வருடங்களுக்குப் பின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வை மருதுபாண்டியர் வெளியிட்ட அதே திருச்சி சீரங்கத்தில் மீண்டும் ஒருமுறை சிறப்புற நினைவுகூருவதன் மூலம் இன்று இந்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இம்முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய வீரசங்கத்திற்கு ,அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக நன்றிகளும் ,பாராட்டுதல்களும்!
உங்களுக்குள் கருத்து மாறுபாடுகள் இருந்தால் அதை மறந்து நம் பாட்டன் நினைவாக நடத்தப்பெறும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உறவுகளை வேண்டுகிறேன்.
விழா சிறக்கட்டும்.நல்வாழ்த்துக்கள்!
நிகழ்விடம்: திருச்சி ,சீரங்கம்
நாள்: 12-06-2017,திங்கள் கிழமை
நேரம்: காலை 8 மணி
தொடர்புக்கு: 98425 01330
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்