முகமதிய படையெடுப்பாளர்கள் ,ஆங்கிலேயரை விரட்டி மதுரையை மீட்ட வெள்ளையன் சேர்வை(அகம…

Spread the love

முகமதிய படையெடுப்பாளர்கள் ,ஆங்கிலேயரை விரட்டி மதுரையை மீட்ட வெள்ளையன் சேர்வை(அகமுடையார்)
—————————-
முகமதியர்களும்,ஆங்கிலேயர்களும் மதுரை ஆண்ட நாயக்கர் வம்சாவளியினரை விரட்டி மதுரையை கைப்பற்றிய காலத்தில்
ஆங்கிலேய தளபதி கோப்புடன் நேரடி வாள் சன்டையில் மோதி ஜெயித்தவர்.

ஆங்கிலேயர்களையும், முகமதிய படைகளையும் இருமுறை வென்று மதுரை நாயக்கர் வாரிசான பங்காரு திருமலை நாயக்கருக்கு மதுரையில் முடிசூட்டி மதுரையை அவருக்கு திருப்பி அளித்தவர்

தென் தமிழக பாளையக்காரர்கள்,மராட்டியர்கள்,ஆங்கிலேயர்கள் ,முகமதிய படைகள் என இவர் காலத்தில்(18ம் நூற்றாண்டில்) தென் தமிழகத்தில் எதிர்த்த அனைவரையும் வெற்றிகண்ட பெரும் தளகர்த்தர் பெரும் ஆளுமை வெள்ளையன் சேர்வை(அகமுடையார்) .

பெரும் வீரர் மட்டுமல்ல பெரும் புரட்சியாளர் ,அன்னிய ஆதிக்கமோ ,ஆளுமை ஆதிக்கமோ எதற்கும் அடிபணியாதவர். கொடுத்த வாக்கை மீறாதவர், அஞ்சியவர்களுக்கு அடைக்கலம் அருள்பவர், நம்பியவர்களுக்காக உயிர் பொருளையும் கொடுக்க தவறாதவர், எதிர்த்தவர்களை நிர்மூலம் ஆக்குபவர். படையெடுப்பாளர்களால் கோயில்களில் தடைபட்ட்டிருந்த பூசைகளை சீர்படுத்தியவர். ஆன்மீக பணிகளை செய்தவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக
சோளகன்/சோழகன் சேர்வை, முத்திருளப்ப பிள்ளை ,மருதுபாண்டியர் வரிசையில் அகமுடையார் சமுதாயத்தின் புரட்சியின் குரலை ஓங்கி ஒலித்தவர் (இதுபற்றி எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை)

இத்தகைய புகழ்மிக்க வெள்ளையன் சேர்வையின் பெயராலேயே பெரிய மருதுபாண்டியருக்கு வெள்ளை என்கிற அடைமொழியுடன் வெள்ளை மருது என்ற பெயர் வழங்கப்பட்டது.

தமிழகம் கண்ட மாபெரும் தளகர்த்தர் வெள்ளையன் சேர்வை(அகமுடையார்) அவர்களின் வீரவரலாறு அதிகம் பேசப்படவில்லை. வரும் பதிவுகளில் ஆதாரத்தோடு பார்ப்போம்!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo