விஷ்ணுவின் வாயிற்காவலர்களான ஜெயா மற்றும் விஜயா- வாணர் குலம் அகமுடையார்களே —–…

Spread the love

விஷ்ணுவின் வாயிற்காவலர்களான ஜெயா மற்றும் விஜயா- வாணர் குலம் அகமுடையார்களே
———————-
தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடக பகுதிகளை ஆட்சி செய்த வாணர் குல அரசர்கள் 20 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளில் தங்களின் வாணர் குலம் சிவபெருமானுக்கு வாயிற்காவலராக (அகம்படி பணி )செய்த குலத்தவர் என்று பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டோம்.

இது குறித்து 3க்கும் மேற்பட்ட கல்வெட்டு மற்றும் செப்பேடுகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இனிவரும் காலங்களில் மீதமுள்ள 15க்கும் மேற்பட்ட கல்வெட்டு சான்றுகளை வெளியிட உள்ளோம்(ஒரே கருத்தை பற்றி திரும்ப திரும்ப வெளியிட்டால் போரடிக்கும் அல்லவா அதனால் தொடர்ந்து வெளியிடவில்லை)

அதேநேரம் வாணர் குலத்தவர்கள் சிவபெருமானுக்கு மட்டும் அகம்படி பணி செய்தவர்களாக குறிப்பிடப்படவில்லை. வாணர் குலத்தவர் விஷ்ணுவிற்கும் அகம்படி பணி செய்தவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாகவத புராணம் வேதங்கள் அல்லது இதிகாசங்களின் ஓர் பகுதியாகவோ கருதப்படுகிறது. இதில் இருந்தே இதன் பழமை வெளிப்படும்.

வாண அரசர்கள் தங்களை மகாபலி குலம் என்பதை அழைத்துக்கொண்டார்கள் அல்லவா? அந்த மகாபலி என்பவர்
ஹிரன்யகசிபுவின் மகனாகிய பிரகலாதனின் பேரன் ஆவார்.

ஆகவே இதில் இருந்து மகாபலியின் முன்னோனே ஹிரன்யகசிபு என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
எப்படி வாணர் குல முன்னோன் மகாபலி சிவனுக்கு அகம்படி செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறார்களோ அதேபோல் மகாபலியின் முன்னோனான பெரும் அரசர்களான ஹிரன்யகசிபுவும் அவனது சகோதரன் ஹிரன்யாட்சனும் முன்ஜென்மத்தில் ஜெயா ,விஜயா என்ற பெயரில் விஷ்ணு வாழும் வைகுந்தத்திற்கு வாயிற்காப்பாளர்களாக (அகம்படி )செய்ததாக குறிக்கப்படுகின்றனர்.

அதில்
ஜெயா மற்றும் விஜயா எனும் இரு சகோதர்கள் விஷுணுவின் வைகுந்ததிற்கு காவல் பணி செய்ததாகவும்
அப்போது குழந்தை வடிவத்தில் வைகுந்தத்தில் நுழைய பார்த்த சனத்குமார்களை அவர்கள் தடுத்ததாகும்
அதனால் கோபமுற்ற சனத்குமார்கள் அவர்களுக்கு சாபம் கொடுத்ததாகவும்

அதானாலேயே ஜெயா மற்றும் விஜயா அசுரர்களாக பூமியில் பிறந்தனர் என்றும்
அவர்கள் சத்யயுகத்தில் அரசர் ஹிரன்யகசிபுவாகவும் மற்றும் ஹிரன்யாட்சனாகவும்,
திரேதா யுகத்தில் இலங்கை அரசன் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும்.
துவாபர யுகத்தில் சேதி நாட்டு மன்னனான சிசுபாலன் மற்றும் தந்தவக்ரன் என்ற பெயரிலும் பிறந்தனர்
என்று குறிப்பிடுகிறது.

ஆதாரங்கள்
jaya and vijaya gatekeepers of vishnu at vaiguntham – book The Complete Srimad Bhagavatam of Srila Prabhupada plate two (பார்க்க இணைப்பு 2)

jaya and vijaya incarnated as hiranyakasipu and hiranyaksa at satya yuga-book The Complete Srimad Bhagavatam of Srila Prabhupada page1 (பார்க்க இணைப்பு 3)

“அங்கணன் கயிலைகாக்கும்
அகம்படித் தொழின்மை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம்
முதற்குரு நாதனாகி
பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும்
பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி…”

என்று காஞ்சிபுராணத்தில் அகம்படி பணியை அடையாளமாக கொண்டவராக நந்திதேவர் குறிப்பிடுவதை போல

தொல் மற்றும் நீடிய பெருமை கொண்ட வாணர் குலம் தங்களை சிவனுக்கும், விஷ்ணுவிற்கும்
அகம்படி பணி செய்தவர்களாக ஓர் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதனாலேயே வாணர்களின் கொடி நந்திகொடி என்றும் வாணர்களின் தலைநகரம் நந்திகிரி என்றும் அழைக்கப்பட்டது. பல்லவர்களுக்கும் முன்பாக நந்திகொடியை பயன்படுத்தியவர்கள் வாணர்கள் ஆவர் (வரும்காலத்தில் அதை தனிப்பதிவாக செய்வோம்)

அதுமட்டுமல்ல வாண அரசர்கள் அகம்படிகள் என்று தாங்கள் சாதியை நேரடியாக குறிப்பிட்டுள்ளதோடு , அகப்பரிவாரத்தார் என்றும் கல்வெட்டுக்களில் தங்களை குறிப்பிட்டுள்ளனர்.வாணர் அகம்படியர்கள் என்பதற்கு நூற்றுக்கணக்கான வரலாற்று ஆதாரங்கள் பண்பாட்டு அடையாளங்கள் போன்றவையும் ,தொடர்ச்சியாக வரும் ஆதாரங்களும் உள்ளன.
விரைவில் முழு ஆதாரங்களையும் காணொளி வடிவில் ஒவ்வொரு பாகமாக வெளியிடுவோம்.

முக்கிய குறிப்பு:
புராணங்களில் உள்ள அடையாளங்களை வைத்து அதில் ஒளிந்துள்ள மிகச்சிறிய உண்மைகளை வெளிக்கொணர முயல்கிறோமே தவிர புராணங்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இங்கே வலியுறுத்தி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo