இன்று நவம்பர் 17- மொழி போர் தியாகி, தமிழ் போராளி என போற்றப்படும் அகமுடையார் குலத…

Spread the love

இன்று நவம்பர் 17- மொழி போர் தியாகி, தமிழ் போராளி என போற்றப்படும் அகமுடையார் குலத்தில் பிறந்த பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் 113 ஆவது பிறந்த தினம்.

மொழிப்போர் தளபதி இலக்குவனார் அவர்களின் பணிகளை பற்றி இன்றைய தினத்தந்தி( 17.11.2023) கட்டுரை வெளியாகியுள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி!

மேலதிக தகவல்கள் -இலக்குவனார் அகமுடையார் சாதியே!
—————
இலக்குவனாரை மொழிப்போர் தியாகியாக தமிழர் அனைவரும் சொந்தம் கொண்டாடுவது மகிழ்வுக்குரிய விடயம் ஆகும்.

ஆனால் அவர் பிறந்த சமுதாயத்தை திரித்து மாற்று சமுதாயம் என்று எழுதும் பொய்மையை நாம் கண்டிக்கவே செய்ய வேண்டும்!
அகமுடையார் சமுதாயத்தில் பிறந்த தலைவர்களை சிலர் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அது போல இலக்குவனாரையும் சொந்தம் கொண்டாடுவார்கள். அதனால் அதற்கும் ஆதாரத்தை பதிவட்டுவிடுவோம்.

இலக்குவனார் அவர்களே தம் வாழ்க்கை பற்றி எழுதிய (சுயசரிதை ) நூலான என் வாழ்க்கைப்போர் என்ற நூலின் முதற் பக்கத்தில்

தனது ஊர் திருத்துறைபூண்டி வட்டத்தில் உள்ள வாய்மேடு அருகில் உள்ள கீழக்காடு என்றும் இலக்குவனாரின் தந்தை பெயர் சிங்காரவேலுத்தேவர்(அகமுடையார்) என்பதை குறிப்பிடுகின்றார்.

நூலின் 38ம் பக்கத்தில் தனது சாதி அகம்படியர் அல்லது அகமுடையர் என அழைக்கப்படும் சாதி என்றும் அதில் அவர்கள் குடும்பம் சைவம்( அசைவ உணவை உண்ணாதவர்கள்) என்றும் குறிப்பிடுகிறார்.
அதில் இலக்குவனாரின் தந்தை சிங்காரவேலுத்தேவர் குடும்பத்தார் தொன்மையான சைவ( மிக நீண்டகாலமாக சைவ உணவு பழக்கத்தை ) உடையவர்கள் என்றும் கூறுகிறார்.

இலக்குவனாரின் சாதியை இங்கு குறிப்பிட வேண்டிய மற்றொரு காரணம் இலக்குவனார் தமிழ் சாதியை சேர்ந்தவர் என்பதை காட்ட வேண்டியுள்ளதாலுமே தவிர இலக்குவனாரை சாதிய அடையாளத்திற்குள் சுருக்குவதற்காக அல்ல!

நன்றி: தினத்தந்தி செய்திதாள் கட்டுரை பட உதவி: Youthful Nandha Kumar ,திருத்தணி அகமுடையார் சங்க பேஸ்புக் பக்கம்.






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo