First
அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தை முடக்க முயற்சி செய்யப்பட்டது!
———————-
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே! உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இவ்வாழ்த்துக்களை தீபாவளி அன்றே செய்ய முடியாததற்கு காரணம் உண்டு!
இரு தினங்களுக்கு முன்பு நமது பேஸ்புக்கில் அகமுடையார் ஒற்றுமை அக்கவுண்டில் சில மாற்றங்கள் தெரிந்தது.
தீபாவளி அன்று உறவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக அகமுடையார் ஒற்றுமையின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்ற போது
எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பதிவையும் செய்ய முடியாதது தெர்ந்தது.
பின்னர் கவனித்து பார்த்தால், விசமிகள் சிலர் அக்கவுண்டை ஹேக் செய்து அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் இருந்து நமது அக்கவுண்டை நீக்கியது தெரிந்தது.
அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கம் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 1000 பதிவுகளை செய்துள்ளது அதில் அகமுடையாரின் முதல் கல்வெட்டை வெளியிட்டது முதல் இதுவரை 60க்கும் மேற்பட்ட அகமுடையார் கல்வெட்டு செய்திகளோடு 400 க்கும் மேற்பட்ட அகமுடையார் வரலாற்று பதிவுகள் செய்துள்ளது.
சமீபத்தில் சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்க கோரிக்கை பதிவை செய்தோம் அதை இதுவரை 850க்கும் மேற்பட்டோர் சேர் செய்து அகமுடையார் பற்றிய பேஸ்புக்கில் வந்த பதிவுகளிலேயே அதிகம் பேர் செய்த பதிவு என்ற சாதனை படைத்து 1000 பேர் சேர் செய்யும் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் புதிய பதிவுகள் செய்ய முடியாத நிலையை சில கயவர்கள் முயற்சிப்பது
அகமுடையார் ஒற்றுமையின் அகமுடையார் சமுதாய விழிப்புனர்வை குழைக்க செய்யும் முயற்சியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் அந்த குள்ள புத்திகாரர்களின் முயற்சி வெற்றி பெறாது!
பேஸ்புக் நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் அனுப்பி இருநாட்களுக்கு பின்பு நமது ஐடியை மீட்டுவிட்டோம்!
ஆனால் அந்த குள்ள புத்திக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
ஆனால் நான் 1999ம் வருடத்தில் இருந்து இணையத்தில் இயங்கி வருகிறேன். ஆகவே எப்போதுமே பிளான் பி, பிளான் சி என தொடர் திட்டங்கள் வைத்திருப்போம்.
பேஸ்புக்கை முடக்கினால் யூடிப்பில் வருவோம், யூடிப்பையும் முடக்கினால் டிவிட்டர்,டிவிட்டரையும் முடக்கினால் இன்ஸ்டாகிராம்.இன்ஸ்டாகிராமையும் மடக்கினால் வெப்சைட், வெப்சைட்டையும் முடக்கினால் அப்ளிகேசன் .
அகமுடையார்களின் நம்பர் பட்டியல் வைத்துள்ளோம் ஆகவே
மேலே சொன்ன எல்லாவற்றையும் முடக்கினால் கூட எஸ்எம்எஸ் வடிவில் வருவோம்.
ஆகவே நமது பேஸ்புக் பக்கத்தை முடக்குவதால் மட்டும் அகமுடையார் ஒற்றுமை முயற்சியை எவரும் தடுத்துவிட முடியாது. அகமுடையார் சமுதாயம் ஒருங்கிணையும்! அதற்கான முயற்சிகளை அகமுடையார் ஒற்றுமை தொடர்ந்து செய்யும்!
ஆகவே அகமுடையார் ஒற்றுமை ,அகமுடையார் சமுதாயத்திற்காக உழைப்பது நிற்காது! தொடர்ந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவருக்கும் நன்றி!
மற்ற சேனல்களிலும் பின் தொடர வேண்டுகிறோம்!
———————————-
அகமுடையார் உறவுகள் நமது மற்ற சேனல்களிலும் நம்மை பின் தொடர கேட்டுக்கொள்கிறோம்! அப்போது தான் எந்த சேனல் தற்காலிகமாக லாக் ஆனாலும் மற்ற சேனலில் அகமுடையார் சமுதாய செய்தியை நீங்கள் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும்.
யூடிப் சேனல் லிங்க்:
https://www.youtube.com/agamudayarotrumai
டிவிட்டர் லிங்க்:
Tweets by agamudayarotru
இன்ஸ்டாகிராம் பக்கம் லிங்க்:
https://www.instagram.com/agamudayarmatrimony/
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்