இலங்கையில் சோழர் ஆட்சி மீண்டெழ காரணமான அகம்படியார்கள்
———————————–
இலங்கையில் அனுராதபுர ராச்சியத்தை ஆண்ட சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் ஆட்சிக்கு வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு சோழர் ஆட்சி மீண்டெழுந்ததற்கான காரணங்கள் குறித்து இலங்கையில் பள்ளி 10ம் தரம் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ள காரணங்களில் ஒன்று
அகம்படியார் படையணியினரின் கிளர்ச்சி காரணமாக 5ம் மகிந்தன் உருகுணைக்கு தப்பி ஓடினான் என்பதாகும்.
ஆதாரம்: தரம் 10 வரலாறு பக்கம் எண் 58
இதில் சோழருக்கு ஆதரவாக மகிந்தனின் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தவர்கள் அகம்படியார் படைவீரர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.
மேலதிக தகவல்கள்
————-
இன்று யார் யாரோ சோழர்கள் படையை முதன்மையாக தாங்கியது தாங்கள் தான் என்று ஆதாரமே இல்லாமல் புருடா விடலாம்!
சோழர்களுக்காக இலங்கையில் சன்டை செய்தவர்கள், கிளர்ச்சி செய்தவர்கள் அகம்படியர்கள் மட்டுமே அவர்கள் அகம்படியர்கள் படையணியாகவும் இருந்தனர், வேளைக்கார படையிலும் அவர்கள் கிளர்ச்சி செய்தனர். சோழர்களின் வேளைக்கார படையின் தலைவராக அகம்படியர்கள் குறிக்கப்பட்டதும் இதை உணர்த்தும்.
அகம்படி முதலிகளில் அழகியன் மெய் வேளைக்கார பல்லவரையன்
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை வருடம் 1964-1965 எண் 131
இது போன்று நிறைய விடயங்கள் உள்ளன. வரும் காலங்களில் இது போன்று சிறு சிறு வரலாற்று செய்திகளை தொடர்ந்து பார்ப்போம்!
agambadiyar army padaiyani rebelled against singhala king 5th mahinda to support chola kings srilankan book Grade 10 History By RS Chandren pageno58
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்