First
துப்பாக்கி தோட்டாக்களில் பன்றியின் கொழுப்பும்,
பசுவின் கொழுப்பும் தடவியிருந்தால் பயன்படுத்த மாட்டோம் என ஆங்கிலேயர்களின் படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தை துவக்க,
பிறகு அது வன்முறையாக மாற,அந்த வன்முறை பல இடங்களுக்கும் பரவ,
அதையே வெகு நுட்பமாக முதல் இந்திய சுதந்திரப் போர் என சில கயவர்கள் பதிவு செய்ய,அந்த “1857 சிப்பாய் கலகமே”
முதல் இந்திய சுதந்திரப் போர் என நிலைத்து விட்டது !
ஆனால்,அதற்கும் 56 வருடங்களுக்கு முன்பே சிவகங்கையை ஆட்சி செய்த மருதரசர்களின் தலைமையில்,கேரளா,கர்நாடகா,மராட்டா உள்ளிட்ட தென்னிந்திய பாளையக்காரர்களும்,குறுநில மன்னர்களும் ஒருங்கிணைந்து போரிட்ட “தென்னாட்டு புரட்சி” யை வரலாற்று ஆசிரியர்கள் சரியான முறையில் உரிய தளத்திற்கு எடுத்துச் செல்லாத காரணத்தால் மத்திய ஆட்சியர்களால் கண்டு கொள்ளப்படவில்லை !
மேலும்,ஒரு இந்திய பிரதமர் அப்போருக்கு தலைமை வகித்த மருதரசர்களின் பெயரை பொதுவெளியில் உச்சரிப்பதற்கே நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்களுக்கு பின் தான் சாத்தியமானது !
இந்தச் சூழலில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க சமூகம் பல முனைகளிலும் போராடியது !
அந்த போராட்டங்களின் பலனாக ஆட்சியர்களின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மருதரசர்களின் வீரவரலாற்றை உற்று நோக்க துவங்கியிருக்கிறது !
அதன் ஒரு பகுதியாக வருகின்ற 22/10/23 ஞாயிறன்று,சின்னவரின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனம் வெளியிடப்பெற்ற திருச்சி மாநகரில் மருதசர்களின் நினைவு நாள் அனுஷ்டிக்கப் பெறுகிறது இந்நிகழ்வில் மத்திய அரசின் பிரதிநிதி,மேதகு தமிழக ஆளுநர்
திரு R.N.இரவி அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்கிறார் !
இந்த நிகழ்வு பெரு வெற்றி பெற,
மத்திய மாநில அரசுகளின் கவனத்தை மேலும் ஈர்க்க,
மருதரசர்களின் வரலாற்றை மீட்க,
அவர்தம் மாண்புகளை போற்ற நாளது தேதி வரை போராடிய அனைத்து நல் உள்ளங்களும் பெருவாரியாக பங்கெடுத்து,
மாநில தலைநகர் வரை உருவெடுத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள், தேசத்தின் தலைநகர் புதுதில்லி முதல் நாடெங்கும் போற்றப் பெற சிறப்பித்திடுங்கள்…
நிகழ்வில் பங்கெடுப்போரின் நலன் கருதி முன்னேற்பாடு செய்வதற்கு கீழ்காணும் லிங்க்கை அழுத்தி உங்கள் சுயவிபரங்களை பதிவு செய்திடுங்கள் !
https://activetn.in/epass/
நன்றி
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்