• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

எகிப்திய மன்னர்களை பாரோ என்று அழைப்பது வழக்கம்! பாரோ என்றால் பெரிய வீட்டினுள் வச…

March 28, 2017 by administrator Leave a Comment

Spread the love

எகிப்திய மன்னர்களை பாரோ என்று அழைப்பது வழக்கம்! பாரோ என்றால் பெரிய வீட்டினுள் வசிப்பவன் என்று எகிப்திய சொல்லகராதி பொருள் தருகிறது!
மன்னர்களுக்கு இந்தப் பெயர் ஏன் இந்தப் பெயர் சூட்டப்பட்டது? ஏன் என்றால் அந்நாளில் வீட்டினுள் வசிப்பவர்கள் அரச வம்சத்தவர்கள் என்ற பொருளே உலகம் முழுக்க வழக்காய் இருந்துள்ளது.

உத்தர்காண்டில் உள்ள ஹர்வாலி மக்கள் (ஹர்வாலி என்றால் வீட்டினுள் வசிப்பவர்கள் என்று பொருள்) .ஹர்வால் மக்கள் ராஜபுத்திர சத்திரியர்கள்!இந்திய ராணுவத்தில் ஹர்வால் ரெஜிமன்ட் என்ற தனிப்பிரிவே உள்ளது!

உலகப்புகழ்பெற்ற ஆய்வாளர் திரு.ஐராவதம் மஹாதேவன் உலகத் தமிழ் மாநாட்டில் சமர்பித்த தனது ஆய்வுக் கட்டுரையில் அகம்படி,அகத்தான் என்ற வார்த்தைகளே அரசபரம்பரையினரைக் குறிக்க உலகம் முழுவதும் பயன்பட்டதை தெரிவித்துள்ளார்

“புரிசை ஆழிசூழ் வட்டத் தகம்படி- புரிசையும்அகழியும் சூழ்ந்த வட்டத்து அகம்படி “-நூல்: கருவூர்த் தேவர் திருவிசைப்பா ஆசிரியர்: கருவூத் தேவர்( சோழமன்னன் முதலாம் ராஜராஜனின் குரு) காலம்: 11ம் நூற்றாண்டு

அதாவது புரிசை(கோட்டை அரணும்,மதிலும்) , ஆழி அல்லது அகழியும் (அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும்) கொண்ட பாதுகாக்கப்பட்ட இடமே அகம்படி(அரண்மனை ) ஆகும்.

அகம்படியர் என்போர் அரண்மனையில் வசிக்கும் அரசகுலத்தவர் ( எகிப்திய பாரோ மற்றும் ஹர்வாலி வார்த்தைகளுடன் பொருத்திப் பார்த்தால் இதன் உண்மைப் பொருள் விளங்கும்)

அதுமட்டுமா அகம்படி அல்லது அகம்படியர் ,உள்மனையார், மனைப்பெருஞ்சனம் என்று இன்றைய அகமுடையார்களை குறிக்க இதே வார்த்தைகளே பழந்தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்ததை கல்வெட்டு இலக்கியங்கள் வழியாகப் பார்த்தோம்!

கி.மு 1400களில் பாரோ என்ற வார்த்தை எகிப்திய மன்னர்களை பயன்படுத்தப் பயன்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது , இப்பொருளுக்கான அடிப்படை எங்கிருந்து சென்றிருக்கும் ? அகம்படியர் ,அகத்தான் எனும் தமிழ் மூலத்திலிருந்து?

இப்படி உலகம் முழுக்க அரசவம்சத்தினரை குறிக்க அகம்படியர் பொருள் மூலம் தமிழகத்தில் இருந்தே சென்றிருக்க வேண்டும் ஏனென்றால் சிந்து சமவெளி நாகரீகத்தில் இக்குறியீடுகள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்றும் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களில் கி.பி 3ம் நூற்றாண்டில் இது பயன்பட்ட ஆதாரம் உள்ளதாலும் இதனை வலுவாக நம்புவதற்கு ஆதாரம் உள்ளது. ஆராய்வதற்கு நிறைய உண்டு! தொடர்வோம்!

படம் 1: பாரோ என்ற எகிப்திய சொல்லின் பொருளும் அதன் மூலமும்
படம் 2: எல்லையைப் பாதுகாக்கும் ஒர் ஹர்வால் வீரன்

மேற்கோள்கள்!
http://www.agamudayarotrumai.com/2710 -சிந்துவெளி நாகரீகத்தில் இருந்தே அரசபரம்பரையினரைக் குறிக்கப் பயன்படும் “அகம்படியினர்” “அகத்தான் ” எனும் வார்த்தைகள் ஆய்வுக் கட்டுரை!
http://www.agamudayarotrumai.com/4033 -கி.பி 5ம் நூற்றாண்டுக்கு முந்தைய பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்படும் உள்மனையார்(அகம்படியார்)!
http://www.agamudayarotrumai.com/4109 -கி.பி 3ம் நூற்றாண்டில் மனைப்பெருஞ்சனம் என இலக்கியத்தில் அகம்படி இனத்தவர்கள்
https://en.wikipedia.org/wiki/Pharaoh
https://en.wikipedia.org/wiki/Garhwal_Rifles



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அகமுடையார் மண்டபங்கள்/சத்திரங்கள் சில 1)நெடுங்...
அகமுடையார் கோட்டையாம் #ஆரணியின் சிங்கமகன்கள் #ஶ்ரீராம் நகர் இளைஞர்கள்... ஆரணியில...
பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போதே (1946ம் வருடம்) பிரிட்ட...
அகமுடையார்களின் அடையாளம் யார் ??? வரலாற்றில் !!!
மாமன்னர் மருதுபாண்டியர் பற்றி நாட்டுப்புறப் பாடகர் முனைவர்.திருமதி.விஜயலட்சுமி ...
#தொண்டைமண்டலம்_படுவூர் கோட்டம்_பெருந்திமிரி (அகமுடையார்கள் மண்டகப்படி) #திமிரி...
மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி காளையார்கோவிலில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜை மற்றும் பொங
துவாரபாலகர்களாக யானை மற்றும் அழகான பூ அலங்காரத்தில் காளையாகோவில் மருதுபாண்டியர் ...
இன்று (24 ஆகஸ்ட்) பிறந்தநாள் காணும் அகமுடையார் அரசியலின் நம்பிக்கை நட்சத்திரம், ...
தலைநகர் டில்லியில் பட்டொளி வீசி பறந்த #முதல்_சுதந்திர_கொடியை வடிவமைத்த குடியாத்த...
19 ஆம் நூற்றாண்டிலேயே நம் அகமுடையார்(துளுவ வேளாளர்) இன ஏழை மாணவர்களுக்கு இலவச உண...
திருவள்ளூர் மாவட்டம்.. #திருத்தணி_அகமுடையார்_சங்கம்.. இளைஞர்களின் எழுச்சியே...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar