கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகமுடையார் நடுகல் —————————–…

Spread the love
0
(0)

First
கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகமுடையார் நடுகல்
————————————————–
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டைக்கு அருகே துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த கல் ஒன்றை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டறிந்தனர். இதனை புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் க. ராஜன், இந்திய தொல்லியல் துறை தெற்கு வட்டார இயக்குநர் து. தயாளன் உள்ளிட்டோர் அதைப் பார்வையிட்டனர்.

அதன் பின் அவர்கள் கண்டறிந்ததில் இந்த நடுகல்லில் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் இடம் பெற்றுள்ளன என்றும் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான தமிழ் பிராமி நடுகல் இதுவென்று கண்டறிந்தனர்.

இந்த நடுகல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. ராசவேலு, ந. அதியமான், வி. செல்வகுமார், ம. பவானி, முன்னாள் பேராசிரியர் எ. சுப்பராயலு, கல்வெட்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராசவேலு தெரிவித்தது: தலா 2 அடி அகலம், நீளமுடைய இந்த நடுகல் முக்கோண வடிவில் உடைக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது.

இதில்

கோவென் கட்டிற் நெதிர
ணறு பொன்கொங்கர் விண்ணகோன்
ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு
அங்கபடைத தாணையன் கணங்
குமரன் கல்
என 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

நடுகல் விளக்கம்
கோவன் கட்டிக்கு அடுத்தாக அரசுப் பதவி ஏற்ற நறு பொன்கொங்கர் விண்ணகோன் என்பவன் ஆநிரையைக் (கால்நடைகளைக் ) கவர அதனை அங்கப்படை தலைவனான( தாணையனான) கணன் குமரன் தடுக்க மேற்கொண்டு வீரமரணமடைந்துள்ளான். அவ்வீரனின் தியாகத்தைப் போற்றியே இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது தெரிகின்றது!

அகம்படி சாதியினரே வரலாற்று நெடுகிலும் அங்கப்படையினராக பல்வேறு கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலிலும் காட்டப்பட்டுள்ளனர் என்பதும் இன்றும் அகமுடையார்களைப் பற்றி பயின்று வரும் கணம் என்ற சொல்லுடன் (கணங்குமரன்) என்று இந்நடுகல் வீரன் குறிப்பிடப்படுவதும் இந்த நடுகல்லில் பேசபப்டும் வீரன் இன்றைய அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவன் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது!

விரிவான செய்திகள் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் விரைவில்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?