First
அகமுடையார் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு தளம்
———————————————–
அகமுடையார் பேரினம் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் தோராயமாக 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் இருப்பினும் அகமுடையார் பேரினத்தில் தொழில்/வணிக நிறுவனங்களை நடத்துவோர் மிகவும் குறைவே!
ஆகவே புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல்,ஏற்கனவே உள்ள தொழில் முனைவோர்களையும் அவர்களின் தொழில்நடவடிக்கைகளை ஊக்குவிதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அகமுடையார்வெப்சைட்.காம் திட்டமிட்டுள்ளது.
20 வருடத்திற்கும் மேலான நேரடி பொருள் விற்பனை அனுபவத்திலும் 12 வருடங்களுக்கும் மேலான இண்டர்நெட் மார்கெட்டிங் அனுவபத்தையும் கொண்டுள்ள அகமுடையார்வெப்சைட்.காம் நிர்வாகிகள் நடைமுறைக்கு பொருந்துகின்ற உடனடியாகவும் அதே வேளை நீண்ட காலம் பலனிளிக்கக்கூடிய திட்டங்கள் பலவற்றை திட்டமிட்டுள்ளோம்!
அதன் முதல் கட்டமாக அகமுடையார் தொழில்/வணிக நிறுவனங்களை அகமுடையார் பேரின மக்களிடம் அறிமுகப்படுத்துவதன் மூலம் இப்பரந்த அகமுடையார் இனத்திடம் அகமுடையார் வணிக நிறுவங்களின் பொருட்கள்/சேவைகளை சந்தைப்படுத்த உள்ளோம்!
இதற்காக மாதக்கணக்கான உழைப்பு ,செலவழித்தலின் பயனாக அகமுடையார்வெப்சைட்.காம் தளத்தில் வணிகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதனை
business.agamudayarwebsite.com
என்ற முகவரியில் இயங்கவிருக்கின்றது.
அல்லது agamudayarwebsite.com என்று மேலே வணிகம்/தொழில் என்ற பட்டனை கிளிக் செய்து வணிகப் பகுதியை பார்வையிட முடியும்!
இத்தளத்தில் அகமுடையார் இனத்தவர்களின் பொருட்கள்/நிறுவனங்கள்/சேவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
ஆகவே அகமுடையார் உறவுகள் இத்தளத்தைப் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான தொழில்/சேவை ஏற்பட்டால் பயன்படுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதே போல் அகமுடையார் இனத்தில் வணிகம்/தொழில் சேவை நடத்துபவர்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டபடி தகவல் தந்து உங்கள் தொழிலை நம் தளத்தின் பிசினஸ் பிரிவில் இணைக்கலாம்.இவ்வாறு இணைப்பதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது.
https://business.agamudayarwebsite.com/add-your-business/
குறிப்பு:
இந்த பிசினஸ் தளத்தில் தற்போது தான் வியாபார தளங்களை இணைக்க துவங்கியுள்ளோம்! இன்னும் ஓரிரு வாரத்தில் அதிக அளவிலான வணிக நிறுவனங்களை இணைத்து பார்வைக்கு வைக்க இருக்கின்றோம்.பல்வேறு வசதிகளும் வர இருக்கின்றன!
மேலும் அகமுடையார் வணிக நிறுவனங்களை ப்ரமோட் செய்வதற்கு லேட்டஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன.ஆகவே விரைவில் உங்கள் வியாபாரத்தையும் இணைப்பில் பயனடைவீர்!
உங்கள் வியாபாரத்தையும் இணைக்க-கிளிக் செய்க
https://business.agamudayarwebsite.com/add-your-business/
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்