ஐயா திரு கி.வீரமணி அவர்கள்! ***************************பெருவாரி மக்களின் நம்பிக்…

Spread the love

First
ஐயா திரு கி.வீரமணி அவர்கள்!
***************************பெருவாரி மக்களின் நம்பிக்கைக்கு எதிரான கொள்கையை கொண்டிருப்பதாலேயே கடும் விமர்சனத்தையும், தனி நபர் தாக்குதலையும் எதிர் கொள்பவர் !
அவ்வாறான விமர்சனத்தை தொடுத்தவர் பட்டியலில் நானும் ஒருவன் !

இருப்பினும்,
ஒரு அகமுடையாராக இன்று பிறந்தநாள் காணும் ஐயாவை வாழ்த்த வேண்டிய கடமையும், கட்டாயமும் எனக்குள்ளது…

வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்கிறேன்,

பெரும் போராட்டத்திற்குப் பின் காங்கிரஸ் கட்சியின் பேராண்மையை பாரதிய ஜனதா கட்சியின் துணையோடு முடிவுக்கு கொண்டு வந்த கையோடு,தேசத்தில் பெருவாரியாக வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நலனிற்காக #மண்டல்கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த முனைகிறார் பிரதமர் திரு வி.பி.சிங் அவர்கள்,

துரதிஷ்டவசமாக, அப்பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழகத்தின் அகமுடையார் சமூகம் விடுபடுகிறது !

இச்செய்தி அறிந்த திரு கி.வீரமணி அவர்கள், தன் நண்பரான திரு தேவசகாயம் (மதுரை தமிழ்நாடு எண்ணெய் பலகாரக் கடை உரிமையாளர்) மூலம்….

தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திரு எஸ்..எஸ்.பாண்டியன் சேர்வை அவர்களுக்கு தகவல் தெரிவிக்கிறார் !

அதன்பின் சென்னை சென்று கீ.வீரமணி அவர்களை சந்தித்து இது பற்றி விவரிக்கின்றார். இந்த பிரச்சனையை தீர்க்கவல்ல ஒரே நபர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் திரு கன்ஷிராம் அவர்கள் மட்டுமே என தெரிவித்து அவரை சந்திக்குமாறு சொல்கிறார் கீ.வீரமணி அவர்கள்,

புதுதில்லி சென்ற
திரு எஸ்.எஸ்.பாண்டியன் சேர்வை, இரா.வெள்ளைச்சாமி சேர்வை இருவரும்
அன்றைய தென்காசி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர், திரு அருணாச்சலத்தின் M.P., அவர்களின் வழிகாட்டுதலின்படி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் திரு கன்ஷிராம் அவர்களை சந்தித்து முறையிட்ட பின்,
இப்பிரச்சனையை மக்களவையில் எழுப்பி 🏆 வெற்றி தேடித் தந்தார் !
அகமுடையார் சமூகமும் பிற்படுத்தப்படோர் பட்டியலில் இடம் பெறுகிறது !

ஆக இந்த இனிய நாளில்,மேற்படி வெற்றிக்கு காரணமாக இருந்த
திரு S.S.பாண்டியன் சேர்வை அவர்களையும்,
திரு தேவசகாயம் அவர்களையும்,
(திராவிடர் கழக நிர்வாகி )
திரு அருணாச்சலம் அவர்களையும்,
திரு கன்ஷிராம் அவர்களையும்,
திரு கீ.வீரமணி அவர்களையும்
மேற்படி தில்லி பயணத்திற்கு நிதியுதவி செய்த தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்ற சங்கத்தின் துணைத்தலைவர் திரு கதிர்மாணிக்கம் சேர்வை அவர்களையும் நன்றியோடு நினைவு கூறி திரு வீரமணி அவர்களுக்கு மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்…..

படத்தில் திரு வீரமணி அவர்களை கௌரவிக்கும் ஐயா பாண்டியன் சேர்வை அவர்கள்….

தகவல் உதவி
திரு கதிர்மாணிக்கம் சேர்வை
தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர்,
திருப்பரங்குன்றம்

புகைப்பட உதவி
திரு Balamurugan Agamudayar




இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo