பல்லவ மன்னர்கள் என்ன சாதி?
—————
பல்லவ மன்னர்கள் பிராமண இனத்தவர்கள் ஆவர் . இவர்கள் தங்களை பாரத்வஜ கோத்திரம் என்றும், தங்களை பிரம்ம சத்திரியர் ( பிராமண இனத்தில் இருந்து அரசாண்டவர்கள் ) என்று தெளிவாக அறிவித்துக்கொண்டதும் இதை எளிதாக எல்லோருக்கும் உணர்த்தும்.
மேலும் ஆரம்ப காலத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதமும் ,பிராகிருதமுமே இருந்தன என்பதும் ,பல்லவர்கள் பிராமணர்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்ததும் இதை புரிந்து கொள்ள உதவும். பின்னாட்களில் பல்லவ மன்னர்களாக மற்ற குடிகளும் வந்து கலந்துள்ளனர். ஆனால் பல்லவர்களின் தோற்றம் என்பது பிராமணர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை! இதை அவர்கள் வெளியிட்ட பல்வேறு செப்பேடுகளும் நமக்கு உணர்த்துகின்றன.
சரி சம்பந்தமில்லாமல் அகமுடையார் ஒற்றுமையில் இதை ஏன் சொல்ல வேண்டுமென்று கேட்கிறீர்களா? வழக்கம் போல எல்லா மன்னர்களையும் தங்கள் சாதி தான் என்று சொல்லி மற்ற சாதிகளுடன் வம்பிழுப்பவர்கள் பல்லவ மன்னர்களையும் தங்கள் சாதி என்று பேசிப் பேசி சன்டை இழுப்பது தேவையற்றது என்பதை பொது தமிழ் சமூகத்திற்கு உணர்த்தத்தான்.
தேவைப்பட்டால் இதைப்பற்றிய விரிவான ஆதாரங்களுடன் காணொளி வெளியிடப்படும்.
மேலதிக தகவல்கள்
பொதுவாக பிராமணர்கள் மன்னர்களை தங்கள் சாதி என கொண்டாடுவது இல்லை. அதை சொல்வதால் என்ன பயன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால்
அதிசயமாக காமகோடி வெப்சைட்டில் பல்லவர்கள் பிராமணர் என்று ஒர் அறிமுகத்தை கொடுத்துள்ளனர்.
https://www.kamakoti.org/tamil/5part45.htm
அதே போல்
Emmanuel FRANCIS என்பவர் பல்லவர் பிராமணர் என்பது பற்றி 300 பக்க ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார்
இந்த புத்தகத்தின் பெயரை தமிழில் சொல்லவேண்டுமென்றால்
“பல்லவர்களின் பரம்பரை அல்லது மரபு , பிராமணர்களில் இருந்து அரசர்களாக ” என்று சொல்லலாம்.
இந்த ஆய்வுக்கட்டுரையை படிக்க வேண்டுமென்றால் கீழே உள்ள ஐரோப்பிய நாட்டு வெப்சைட்டில் ரூ3000 செழுத்தி படித்துக்கொள்ளலாம்(ஆனால் நமக்கு நன்கு தெரிந்த ஆனால் நமக்கு சம்பந்தமில்லாத விசயத்திற்கு நாம் ஏன் பணம் கொடுத்து பணத்தை வீணாக்க வேண்டும் )
https://journal.equinoxpub.com/ROSA/article/view/11187
இது போல் நிறைய ஆதாரங்களையும், அதற்கான இணைப்புகளையும் அடுக்கலாம். ஆனால் நேரத்தின் அருமை கருதி இத்துடன் நிறுத்துவோம். தேவைப்படுவர்கள் இது குறித்து தங்கள் தேடுதலை தொடங்கலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்