First
—
பருவத குல ராஜகுலம் எனும் மீன்பிடி சமூகத்தை சேர்ந்த தம்பி ஒருவர் முகநூல் இன்பாக்ஸில் ஒர் கேள்வியை கேட்டிருந்தார். அதாவது பருவதகுல ராஜ குலத்தினர் எனும் மீனவர் சமுதாயத்திற்கும் அகமுடையார்களுக்கும் சம்பந்தம் உண்டார் என்று கேட்டிருந்தார்கள்.
நீண்ட நாள் செயல்படாததால் பொதுவாக இன்பாக்ஸில் வரும் செய்திகளுக்கு கடந்த காலங்களில் பதில் அளிக்காமாலேயே விட்டு விடுவது வழக்கம். ஆனால் இன்று ஏதோ தோன்றிற்று.
அதனால் அவர் கேள்விக்கு இன்று சுருக்கமாக பதில் அளித்தோம்.
அவர் கேள்விக்கான பதில் : இல்லை அகமுடையார் ஒர் தனி சாதி.அகமுடையார்களுக்கும் பருவத ராஜ குலத்திற்கும் தொழில் ரீதியான சம்பந்தம் உண்டே தவிர சாதி ரீதியான சம்பந்தம் இல்லை. அகமுடையார்கள் குறிஞ்சி நிலத்தில் இருந்து தோன்றியவர்கள் பருவத ராஜ குலத்தினர் நெய்தல் எனும் கடற்கரையை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆனால் வேந்தர் காலத்தில் கடற்போர் மற்றும் கடற்வணிகத்தின் போது இவர்கள் இணைந்து செயல்பட்டதை வைத்து இவர்களை ஒருவர் என சிலர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர்.உதாரணத்திற்கு அகம்படியர்கள் எனும் பாதுகாவல் வீரர்களாக வணிகக் குழுக்குகளுடனும் அரசர்களின் கடற்போரின் போது போர்விரர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர் .அதே நேரத்தில் பருவத ராஜகுலத்தினர் படகோட்டிகளாகவும் ,கடலோடிகளாகவும் , அகம்படியர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
இவ்வளவு தான் இவர்களுக்குள்ளான சம்பந்தம்.
பொதுவாக சிலர் அகம்படவன் என்பதையும் செம்படவன் என்பதை வைத்து குழப்புவதுண்டு. படவர் என்றால் படகில் செல்பவர் என்று பொருள் .அகம்படவர் என்றால் அகம்படி இனத்தை சேர்ந்த படகில் செல்பவர் என்றும் செம்படவர் என்றால் செம்பினால் செய்த படகில் செல்பவர் அல்லது செம்மையான படகில் செல்வர் என்றும் தான் பொருள். இதில் செம்படவர் என்பது தான் உண்மையான கடலோடிகள். அகம்படவர்கள் ஒரு பயணி போலத் தான்.
இதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகின்றோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்