வரலாற்று செய்திகள் அனைத்தும் ஒரே இடத்தில்-அகமுடையார் ஒற்றுமையின் மற்றுமொரு பெருமுயற்சி
—————————————-
அகமுடையார் ஒற்றுமையால் மறுபடி ஓர் பெரும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இம்முறை இம்முயற்சி அகமுடையார் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கும் பயன்படும் பெரும் முயற்சியாக இருக்கப்போகின்றது.
அதாவது
தமிழக வரலாற்று மீட்டெடுப்பில் பல்வேறு அமைப்புகளும்,தனிநபர்களும் புதிய கல்வெட்டுக்களை கண்டெடுத்து பதிவு செய்கின்றனர் மேலும் ஏற்கனவே இருக்கும் கல்வெட்டுக்களை பற்றி விரிவாக எழுதி பதிவு செய்கின்றனர்.
ஆனால் இச்செய்திகள் பல்வேறு சோசியல் மீடியாக்களிலும் ,செய்தி தாள்களிலும் பதிவு செய்யப்படுவதால் இந்த எல்லா செய்திகளையும் தேடி படிப்பது என்பது கடினமான பணியாகும்.
இந்த குறையை போக்கும் வண்ணம் அகமுடையார் ஒற்றுமை சார்பாக TamilagamNews.com வெப்சைட்டில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனை கொண்டு பல்வேறு சோசியல் மீடியாக்களிலும் ,செய்தி தாள்கள்,இணையதளங்கள் மற்றுமுள்ள பல்வேறு தரவுகளில் இருந்து வரலாற்று செய்திகளை தேடி கொணர்ந்து ஒரே இடத்தில் பதிவு செய்கின்றோம்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் சோசியல் மீடியாக்களின் குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் தரவுகள் வெளியிடப்பட்டிருந்தாலும் தேவையான நேரத்தில் நமக்கு தேவையான செய்திகளை உடனுக்குடன் தேடிப்பெற முடியாது.
ஆனால் நமது TamilagamNews.com தளத்தில் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டபப்ட்ட வரலாற்று செய்திகளை ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதோடு தேவையான தலைப்பில் விசயங்களை தேடி அதன் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெறமுடியும்
உதாரணத்திற்கு ஒருவர் “பல்லவராயர்” என்ற தலைப்பில் செய்திகளை பெற விரும்பினால் பேஸ்புக்கில் சென்றால் அதை எளிதாக தேடி பெற முடியாது (பல்வேறு செய்திகளை அது காட்டுவதில்லை ) இல்லை ஒரு பிரபல வரலாற்று பக்கத்தில் பல்லவராயர் என்ற தலைப்பில் செய்தியை தேட விரும்பினால் அப்பக்கத்தின் எல்லா பதிவுகளையும் பார்த்து தேடவேண்டும் (இது வேளைபளு மற்றும் நேரமெடுக்கும் வேலையாகும்)
ஆனால் அதே நேரம்
TamilagamNews.com வெப்சைட் சென்று அங்குள்ள சர்ச் பாக்சில் பல்லவராயர் என்று டைப் செய்து தேடினால் போதும் , நாம் சேகரித்து வைத்துள்ள செய்திகளில் பல்லவராயர் என்ற பெயருள்ள செய்திகள் உடன் திரையில் தோன்றும்.
குறிப்பு
தளத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு இருப்பதாலும் ,காப்பிரைட் போன்ற விசயங்களுக்ககாவும் TamilagamNews.com வெப்சைட் இப்போது பொது பார்வைக்கு இல்லை. வெப்சைட்டில் இருக்கும் தகவல்களை பாஸ்வேர்ட் கொண்டு தான் பார்க்க முடியும்.
அகமுடையார் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்கள் மற்றும் மாற்று சமுதாயத்தில் வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு இந்த வெப்சைட்டை அணுக பாஸ்வேர்ட் வழங்கப்படும்.
தற்போது செய்திகளை சேகரித்து சேர்த்துக் கொண்டுள்ளதால் அதிக தகவல்களை இணைப்பில் சேர்க்க தாமதமாகலாம். ஆனால் விரைவில் அதிகம் அதிகம் தகவல்கள் இணைக்கப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்