First
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முகமதியர் ஆக்கிரமிப்பை அகற்றிய மருதுபாண்டியர்
———————————————————————-பாண்டிய நாடான மதுரை இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாயிற்று . பல வருடங்கள் மதுரையில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற போது மதுரையின் கோவில்கள் முகமதியரின் கைவசம் ஆனது.
விஜயநகர் ஆட்சியாளர்கள் வந்து முகமதியர்களை மதுரை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றிய போதும் கூட தொடர்ந்து முகமதியர்களின் கை மதுரையின் பலவிடங்களில் ஓங்கியே இருந்தது.
அவ்வகையில் விஜயநகர் ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு முகமதியர்களில் வெளியேறிய போதும் கோவிலை ஒட்டியுள்ள மண்டபத்தை தங்களுக்கான இடம் போல் ஆக்கிக் கொண்டு வழிபாட்டினை செய்து வந்தார்கள் .
கிபி 1790ம் ஆண்டு மேற்கத்திய நாட்டவரால் வரையப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு ஆடி விதி பற்றிய ஓவியத்தில் மரங்கள் அருகே இருக்கும் குறிப்பிட்ட மண்டபத்தில் இஸ்லாமிய கட்டிடக் கலை வடிவிலான குறியிட்டைக் காண முடியும்.
18ம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்டுவந்த மருதுபாண்டியர்கள் கி.பி 1790ம் ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த போது முகமதியர்கள் இந்த மண்டபத்தில் குழுமியிருந்து ஓதிக்கொண்டிருப்பதை கண்டார்கள்.
மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள்ளேயே முகமதியர்களின் முழக்கத்தை கண்ட மருதுபாண்டியர்கள் ,முகமதியர்களை நோக்கி ,தான் சாமி தரிசனம் முடித்து வருவதற்குள் இந்த இடத்தை காலி செய்திருக்க வேண்டும் என்றார்.மருதுபாண்டியர்கள் திரும்பி வந்து பார்த்தபோது முகமதியர்கள் அந்த இடத்தை காலி செய்திருந்தனர். மருதுபாண்டியர்கள் அத்தோடு நிற்கவில்லை. என்னதான் இஸ்லாமியர் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அவர்கள் தொழுகை செய்திருந்த இடத்தை விட்டு அவர்களை போகச்செய்ததை அவர் மனம் ஏற்கவில்லை.
இதனால் அவர் முகமதியர்களை அழைத்து அவர்களுக்கு இன்றைய தெற்குவாசல் சப்பானி கோவில் பகுதியில் இடத்தைக் கொடுத்ததோடு அங்கு முகமதியர்களான பள்ளி வாசலையும் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளிவாசலே தெற்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள மினா நூர்தீன் பள்ளி வாசல் ஆகும். மேலும் இக்கோவில் செலவுகளுக்காக கிராமங்களையும் கொடையாக வழங்கியுள்ளார்.
தன் மத உணர்வுகள் பாதிக்கப்படுகின்ற போது அதை தட்டிக் கேட்கவும் வேண்டும் அதே வேளை மாற்று சமூகத்தினர் மனம் புண்படாமல் இருக்கவும் வேண்டும் என்பதை புரிந்து கொண்டவர் மருதுபாண்டியர்கள்.
சிறுபான்மையினர் ஓட்டு கிடைப்பதற்காக இந்து மக்களின் மனம் புன்படுமாறு பேசுவோர் ஒருபுறம், நாம் எல்லாம் இந்துக்க்கள் மாற்று சமூகத்தினர் நமக்கு எதிர்கள் என்று வெறியூட்டி இந்து மத ஓட்டுக்களை வேட்டையாட திரியும் கட்சிகள் ஒருபுறம் என மாறி மாறி கட்சியினர் வஞ்சித்து வரும் இக்காலத்தில் தன்னுடைய வழிபாட்டு உரிமையில் தலையூட்டு ஏற்படுகின்ற போது சமரசம் செய்து கொள்ளாமலும் அதே நேரம் மாற்று மதத்தினர் மீதும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொண்ட மருதுபாண்டியர் இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒர் நல் எடுத்துக்காட்டாகும்.
மேலதிக தகவல்மீனாட்சி அம்மன் கோவிலில் உள் அமைந்துள்ள சேர்வைக்கார மண்டபம் மருதுபாண்டியர்கள் கட்டியதாகும்.
இம்மண்டபத் தூண்களில் மருதுபாண்டியர் இருவரின் ஆளுயர சிற்பங்கள் காணப்படுகின்றன.மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 1008 திருவாச்சி விளக்குகள் அடங்கிய அழகிய சிற்பங்கள் உள்ள விளக்குத் தொகுப்பை அளித்தார் .இந்த விளக்குகள் எரிவதற்கு ஆவியூர்(அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது) இரு கிராமங்களை தானமாக அளித்தார். இந்த விளக்குகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேவார மூவர் உலா வருவதற்கு வெள்ளித் தேர் ஒன்றை செய்தளித்துளார்கள் இது தற்போது மதுரை ஆதின மடத்தில் உள்ளது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்