அகமுடையார் அடையாள அரசியல் ————————————————— 19…

Spread the love
0
(0)

First
அகமுடையார் அடையாள அரசியல்
—————————————————
1983 ஆம் ஆண்டு, நவம்பர் திங்களில் “அகம்படியர் குரல்” இதழில் வெளிவந்த
இக்கட்டுரையை வரைந்தவர் தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர், வீரமிகு, எஸ்.எஸ்.பாண்டியன் சேர்வை அவர்கள்,

இக்கட்டுரையை அகமுடையார் உறவுகள் முழுமையாக வாசித்து முக்குலம், தேவரினம் என்ற ஒவ்வாமை கழிச்சடை அரசியலால் அகமுடையார் பேரினம் வஞ்சிக்கப்பட்ட நெடிய வரலாறுகளை அறிந்து, அந்த மாயவலையில் இருந்து மீண்டு, அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்.

தலைவிதியை மாற்றும்
தஞ்சை மாநாடு !
———————————
அகம்படிய இனமே ! அலைகடலென ஆர்ப்பரித்து வா !

எஸ்.எஸ்.பாண்டியன் பொதுச் செயலாளர்,

உறவினர்களே !

ஆண்ட இனத்தின் அடலேறுகளே ! வாழ்ந்த இனத்தின் வம்சாவழியினரே ! அரசர் கட்கெல்லாம் அமைச்சர்களாயிருந்து அகத்திற்கு அல்லாமல் புறத்திற்கு மண்டியிடாத மங்காத புகழோடு வாழ்ந்த மானம் காத்த மருதுபாண்டியன் இனத்தோன்றல்களே !

இன்று எடுப்பார்கெல்லாம் கைப்பாவை யாகிவிட்டவர்களே,கண்ணிரண்டிருந்தும் பார்வையற்றவராய், காதிரண்டிருந்தும் கேளாகாதினராய், சிந்திக்கும் ஆற்றல் இருந்தும் சிந்திக்க மறுத்து, மாயையில், மயக்குபூச்சில், மினுமினுப்பில் விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்துகிடப்பவர்களே ! தயைசெய்து சிந்தியுங்கள் உங்கள் குலப்பெருமையை, உங்கள் மாண்புகளை, அவர்கள் தங்கள் சுகவாழ்விற்கு தங்கள் இன உயர்வுக்கு நம்மையும் சேர்த்து மக்கள் விகிதாச்சாரத்தை கூட்டிகாட்டி மாண்புகளாக நினைத்து திட்டமிட்ட அவர்களின் செயலுக்கு கடந்த 50 வருடகாலமாக ஆட்பட்டிருந்ததெல்லாம் போதும். அவர்களோடு இணைந்து “முக்குலம்” என்ற பெயரால் அவர்களால் நம் இனத்தவர்க்கு ஏற்பட்ட கல்விச்சலுகை, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஏதேனும் ஒன்றை அவர்களால் சுட்டிக்காட்ட இயலுமா என்ற கேள்வியை சங்கத்தின் சார்பில், பொறுப்பில உள்ள தொண்டன் என்கின்ற முறையில் வைக்கின்றேன் – கூறட்டும் பதில்.

மாறாக நம் எண்ணிக்கையையும் சேர்த்துக் காட்டி அவர்கள் பெற்ற சலுகைகள் அனைத்தையும், பெற்ற பதவிகளையும் நாம் பட்டியல் போட்டு காண்பிக்கின்றோம். தயாரா ? மேலும் அவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்
கொல்லாம் நம்மையும் ஆளாக்கி நம் மக்கள் பட்ட துயரமெல்லாம் விரிவாக விளக்கமாக கூறவா ?

அப்பாவி அரிஜன மக்களையெல்லாம் அடாவடித் தனத்தால் துன்புறுத்துவது அவர்களுடைய எதிர்ப்பு ஏற்பட்டவுடன் ‘ “முக்குலம்” என்று முகமூடி போட்டு நம்மையும் இழுத்து விட்ட இடங்களை குறிப்பிடவா ? முக்குலத்தோர் என்ற பெயரால் நீங்கள் செய்த கொடுமை களுக்கு அகம்படியர்கள் குறைவாக வாழும் பகுதியில் அந்த அப்பாவி மக்கள் தாக்குதல்களுக்கு ஆளான போதெல்லால் அசைவற்று இருந்தீர்களே அதைப்பற்றி விமர்சிக்கவா ? உங்களில் ஒருவர் தாக்கப்பட்டவுடன் முக்குலம் என்று ஒப்பாரி வைத்த இடங்களைப் பற்றிய விபரமெல்லாம் கூறட்டுமா ? வேண்டாம் என்று தான் நினைத்திருந்தோம். நமக்குரிய பங்கை, நமக்கென்று ஏற்பட்ட உரிமைப்படி பெற முயலுவதை தடுத்து தனக்கே வேண்டுமென்று நினைத்து செயல்படத் துடிக்கின்றது தேவர் பேரவை. சட்டத்தில் உள்ள “அகம்படியர்” என்ற பெயரை மாற்றி தேவரினம் என்ற பெயரால் மாற்றம் செய்து தன் இனப் பெரும்பான்மைக்கு பாடுபடுபவர்
களுக்கு துணைபோகும் நம் அகம்படியர்
நண்பர்களுக்காகத்தான் வருத்தப்படு கிறோம்.

வெள்ளையர்கள் இந்த நாட்டில் அடியெடுத்து வைத்தது முதல் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, எப்படி கிருத்துவ மதத்தை பரப்பி அவர்களையும், இந்தியக் கிருத்துவர்
களையும் மதத்தின் பெயரால் தனக்கு சாதகமான கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால், மதகுருமார்கள் நியமிக்கப்பட்ட பொழுதெல்லாம் ஆங்கிலேயருக்கு முதலிடம், அவர்களோடு கலப்பு மணம் செய்து கொண்ட ஆங்கிலோ இந்தியர்களுக்கு இரண்டாவது இடம், இந்தியக் கிருத்தவர்களுக்கு மூன்றாவது இடம், அதே போன்று இஸ்லாமியர்கள். அண்மையில் கூட மதமாற்றங்கள் ஏற்பட்டது. அவர்களிலும் கூட தொழுகை யில்தான் ஒன்றாக இருக்க முடியுமே தவிர பாக்கி சமூக நடவடிக்கைகளில் எல்லாம் மாறி வந்தவர்களுக்கு முன்னுரிமை கிடையாது. இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் சீனியாரிட்டி, ஜுனியாரிட்டி, அந்த முறையில் தேவரினமாக மாறுபவர்கள் ஜுனியர்கள் தானே ? புரிகிறதா ? ஆகவே, அவர்களுடைய நல்வாழ்வமைப்புக்கு பக்க பலமாக நம்மை நிறுத்திக்கொள்ள – நாங்கள் தான் பெரும்பான்மையினர் என்று சர்க்காருக்கு சுட்டிக்காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்து செயல்படுகிறது தேவர் பேரவை.
ஏமாறாதீர்கள்.

நாமும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமக்குரிய பங்கைப்பெற தக்க நேரங்களில் தக்க ஆதாரங்களோடு சர்க்காருக்கு கொடுத்திருக்கின்றோம்.

“தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்”

என்ற குறளுக்கு ஒப்ப, தெரிந்தவர்களோடு, அறிஞர்களோடு அணுகி அவர்களை கலந்து அம்பாசங்கர் குழுவிற்கு பதில் கொடுத்துள்ளோம் . *

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்

என்றபடி கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்ந்துள்ளது. இந்த கால கட்டத்தை நாம் தவறவிடக் கூடாது என்ற தீர்ந்த தெளிவின்பேரில் சென்னை அகம்படியர் கல்வி வளர்ச்சி சங்கம், தஞ்சையில் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்து ஆரம்ப கால வேலைகள் நடைபெற்று வருகின்றது. ‘

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத்தான் முந்துறும்”

என்ற வாக்கின்படி “உறவுமலர்” ஆசிரியர் அன்பர் மா.அன்பழகனார் குறிப்பின்படி இனச்சேவைச் சிங்கத்தின் வழித் தோன்றல் வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளார். மாநாட்டின் பொறுப்பாளராக. அன்பர்களே !
தஞ்சை தரணியில் சுவாமிமலை என்ற திருத்தலம் உண்டு. தல வரலாறு எல்லாரும் அறிந்த ஒன்றே ! அந்த வரலாற்றுப்படி தந்தைக்கு உப தேசம் செய்தவன் சுவாமிநாதன். அக்கூற்றுப் படி தந்தை விட்டுச்சென்ற குறை முடித்து வெற்றிகாண, நாதியற்ற இந்த சமுதாயத்தின் “நாதனாக” சுரண்டப்படுகின்ற இச்சமுதாயத்தை சுரண்டுவாரிடமிருந்து மீட்க சுவாமிநாதனாக வந்தவரை வரவேற்று வாயார, நெஞ்சார, வாழ்த்துகின்றோம்.

அகம்படிய பெருமக்களே! நம்மிடம் ஒற்றுமையில்லையா ? உண்டு! நமக்கு தகுதி இல்லையா? உண்டு!! நம்மிடம் தலைவர்கள் இல்லையா? உண்டு!!!
பின் என்ன இல்லை? மன்னியுங்கள். நம்மிடையே இன உணர்வு இல்லையே! இன உணர்வுபெற வாரீர் தஞ்சைக்கு! காவிரி கரைபுரண்டதென – காண் போர் வியக்க இனமானம் காத்திட வாருங்கள்
“கரந்தைக்கு” என்று இருகரம் கூப்பி இதயவிம்மலாக வேண்டுகின்றோம்!

நன்றி,
அகம்படியர் குரல்,
16-11-1983
——————
அகமுடையார் அடையாள அரசியலை நோக்கி….

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 9442938890.

(கட்டுரை வாசிக்கும் உறவுகள் முடிந்த அளவு மற்றவர்களுக்கு பகிரவும்) .

இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?