First
கண்ணிரண்டிருந்தும் பார்வையற்றவராய் -முக்குலத்தோர் அரசியலில் ஏமாறும் அகமுடையார் பற்றி திரு.பாண்டியன் சேர்வை(அகமுடையார்)
————————-
அகமுடையார் இனம் தனது இனத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறையுமின்றி இருப்பதை கண்டித்து அகமுடையார் ஒற்றுமையில் பலமுறை நான் எழுதியிருப்பேன் எனினும் சில நாட்கள் முன்பு
“ஒரு சமுதாயம் மொத்தமாக, கண் இருந்தும் குருடனாகவும், காது இருந்தும் செவிடனாகவும், வாய் இருந்தும் ஊமையாகவும், படித்திருந்தும் முட்டாளாகவும் இருந்து கொள்வதே தனக்கு செளரியம் என்று முடிவெடுத்து விட்டால்…” என்று சுருக்கமாக பதிவிட்டிருந்தேன்.
ஆனால் இதே கருத்தை அகமுடையார் சமுதாய முன்னோரான திரு.பாண்டியன் சேர்வை அவர்கள் 1983ம் ஆண்டே தனது அகம்படியர் குரல் இதழில் பதிவு செய்திருந்த விவரம் இன்று ( 05-08-2023) கிடைத்தது.
ஆம் 16-11-1983 அன்று “தலைவிதியை மாற்றும் தஞ்சை மாநாடு” என்ற தலைப்பில் “அகம்படியர் குரல்” இதழில் முக்குலத்தோர் அரசியலில் அகமுடையார்கள் ஏமார்ந்து வருவதை பற்றி அவர் கட்டுரை வெளியிட்டுள்ளார்.
அதில்
“இன்று எடுப்பார்கெல்லாம் கைப்பாவை யாகிவிட்டவர்களே,கண்ணிரண்டிருந்தும் பார்வையற்றவராய், காதிரண்டிருந்தும் கேளாகாதினராய், சிந்திக்கும் ஆற்றல் இருந்தும் சிந்திக்க மறுத்து, மாயையில், மயக்குபூச்சில், மினுமினுப்பில் விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்துகிடப்பவர்களே ”
என்பவை நம் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால் உண்மையில் திரு.பாண்டியன் சேர்வை ( அகமுடையார்) எழுதியதை இதற்கு முன் ( இன்றைய தேதியான 05-08-2023 ) முன் பார்த்ததில்லை. சொல்லப்போனால் இந்த இதழ் அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் மூலமாக இன்று தான் கிடைக்கப்பெற்றது ( அகமுடையார் சமுதாய பழைய இதழ்களை பல்வேறு நபர்களிடமிருந்தும் இவர் ஒருவர் தானே பாடுபட்டு தொகுத்திருக்கிறார் ) . முன்னரே கிடைத்திருந்தால் நாம் அதை பதிவிட்டிருப்போம் அல்லவா?
பாண்டியன் சேர்வை மட்டுமல்ல அவருக்கு முன்னால், இன்னும் எத்தனை எத்தனை பெரியோர்கள் இது போல் வருந்தியிருப்பார்கள்?
அப்படியென்றால் இந்த சமுதாயம் பெரும்காலமாகவே ,இப்படி எதையும் கண்டும் காணாதது போல ,அக்கறையின்றி ,தங்களது பொருளாதாரத்தை வளர்ப்பதையும்,தனிமனித முன்னேற்றத்தையும் மட்டுமே நோக்கமாக கொண்டு நகர்கிறது என்பது தெளிவு!
அதில் இன்னும் சிலர் குலத்தை கெடுக்கும் கோடாரி கொம்புகளாக மாறி மாற்று சமுதாயத்தினருடன் இணைந்து அகமுடையார் சமுதாயத்தையே படுகுழியில் விழச்செய்துவிட்டனர்.
இதுபற்றி திரு.பாண்டியன் சேர்வை(அகமுடையார்) எழுதியுள்ள கட்டுரையில் (இப்பதிவின் இணைப்பில்) நீங்கள் விரிவாக படிக்கலாம்.
புத்தியுள்ளவர்கள் என்றால் பார்த்தாவது திருந்திக்கொள்ளுங்கள்!
நன்றி: அகம்படியர் குரல் இதழின் இககட்டுரை உதவி புகைப்படம் உதவி திரு.பாலமுருகன் அகமுடையார்
ஜீலை 28ம் தேதி நாம் பதிவு செய்த பதிவு லிங்க்:
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid0rYJAXUghxZoUm8SV7QpqfzgLkAtSyrNpBFNQZkFq4SLQrTyJFsNg8Y85RrqLb5Jwl
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
If they failed understand or get to know long run definitely stuck.
A few Servai labels them as Maraver
Because the mixed of Agamudaiyar(servai) with Maraver.
But they should understand that their ancestors should be Agamudaiyar.
Tq