வல்வேற் கட்டியர்”(குறுந்தொகை:11) போராடும் தானை கட்டி”(அகம்226) கொங்கணர், கல…

Spread the love

First
வல்வேற் கட்டியர்”(குறுந்தொகை:11)
போராடும் தானை கட்டி”(அகம்226)

கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்

(சிலப்பதிகாரம், காட்சிக் காதை:156-157)

என்று சங்க காலம் தொட்டு சிறப்பாக கூறப்பட்ட கட்டியர் எனும் அரச மரபினர் அகமுடையார் பேரினத்தின் கோட்டைப் பற்று பிரிவை சேர்ந்தவர்கள்.

கட்டியர் என்றாலே கோட்டை என்பது தான் பொருள் கட்டியர் என்பவர்கள் கோட்டை சம்பந்தப்பட்ட குடியினர். சேரர்களின் கிளைக்குடியினரான இவர்கள் எல்லைப் புறத்தைக் காக்க சேரர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.
வாணர்,மலையர்,கட்டியர் போன்ற சேரர்களில் பல்வேறு கிளைக்குடியினர் உள்ளனர்.

கோட்டைப் பற்று அகமுடையார்கள் சங்க காலத்தில் கூறப்படும் கட்டியர் மரபினர் என்பதற்கு இன்றும் நிறைய சான்றுகள் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பில்லூர், கோவனூர் மற்றும் கட்டிகுளம்(கட்டிகுலம் -கட்டியர் குலம் அல்லது கட்டியர் குளம்) என்னும் பல ஊர்களின் பெயர்கள் கட்டிகுளம் ஊரில் உள்ள வாயிலாக சங்ககால கட்டியர்கள் இன்றும் தங்கள் அடையாளங்களை தாங்களே அறியாமல் இன்னும் சுமந்து கொண்டுதான் உள்ளனர்.

ஏற்கனவே இதைப் பற்றி சொல்லியிருந்தேன். நிறைய கட்டுரைகள் முழுமையான ஆதாரங்களோடு எழுத ஆர்வமுள்ளேன் ஆனா
ஆனால் வேறு வேலைகள் தொடர்ந்து இருப்பதால் நேரம் கைகொடுக்குமா என்று தெரியவில்லை.மனதில் உள்ளதை முதலில் எழதுவோம்.

புகைப்படம்: நூல் மண்ணுரிமை ஆசிரியர் பெங்களூர் குணா -கட்டியர் எனும் பெயருக்கும் கோட்டை என்ற பொருளுக்குமான தொடர்புஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. சேலம் பகுதியின் ஆளுமை செலுத்திய கெட்டி முதலியார் என்போருமே இப்பிரிவில் தான் வர வேண்டும் போல. (கெட்டி / கட்டி)

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?