First
அறிவோம் வரலாறு- உலகமெங்கும் வாழும் தமிழ் பெயர்கள்
———————————————-
இந்தப் பதிவிற்கும் அகமுடையார் சமுதாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தமிழராகிய நாம் நம் தமிழ் மொழி எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்வது நலம் என்பதால் பதிவிடுகின்றோம்.
மரவேலை செய்யும் தொழிலை செய்பவனை தச்சன்/தச்சர் என்று அழைப்பது பண்டைய தமிழகத்தில் இருந்து இன்று வரை இருக்கும் மரபு. புறநானூற்றுப் பாடலில் கூட மரத்தால் தேர் செய்யும் “தச்சன்” பற்றிய குறிப்பு வருகின்றது.
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
(புறநானூறு 87, ஒளவையார்)
இத்தகைய தூய தமிழ் பெயரான தச்சன் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் தங்களின் குடும்ப் பெயர்களாக கொண்டுள்ளது வியப்பு. அதிலும் தமிழில் வழங்குவது போலவே இந்த தச்சர் என்ற பெயர் ஐரோப்பாவில் மரவேலை செய்பவர்களை குறிக்கும் பெயராக பொருள் மாறாமல் விளங்கி வருவது உள்ளது இன்னும் வியப்பாக உள்ளது.
1979 முதல் 1990 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த புகழ்பெற்ற மார்கரெட் தச்சர் அவர்களிம் இந்த தச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரைப் போல் இலட்சக்கணக்கானோர் இந்த தச்சன் என்ற பெயரை பின்னோட்ட்டாகவும் மரத் தொழிலை தங்கள் குடும்பத் தொழிலாகவும் கொண்டு ஐரோப்பாவில் வாழ்ந்துவருகின்றனர்.
தச்சன் என்ற தொழில் பெயரை பின்னோட்டாக கொண்ட ஐரோப்ப்பியர்களில் புகழ்பெற்றவர்கள் பட்டியல் இதோ
https://en.wikipedia.org/wiki/Thatcher
தச்சு என்பது மரவேலையை குறுக்கும்
https://en.wikipedia.org/wiki/Thatching
இவ்வாறு ஆயிரக்கணக்கான தமிழ் பெயர்கள் உலகமெங்கும் இன்றும் வழக்கத்தில் உள்ளன.
அதில் ஒரு உதாரணம் இன்று. சொல்லத் தோன்றியது எழதினோம். அகமுடையார் வரலாற்றுச் செய்திகளையும் பதிவிடுவோம்.இணைந்திருங்கள்!. அதில் ஒரு உதாரணம் இன்று. சொல்லத் தோன்றியது எழதினோம். அகமுடையார் வரலாற்றுச் செய்திகளையும் பதிவிடுவோம்.இணைந்திருங்கள்!
புகைப்படத்தில் : இங்கிலாத்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்