சம்பந்தம் இல்லாத கள்ளர்,மறவர்களை ,அகமுடையார்களுடன் இணைக்க கூடாது- அட்வகேட் சண்ம…

Spread the love

சம்பந்தம் இல்லாத கள்ளர்,மறவர்களை ,அகமுடையார்களுடன் இணைக்க கூடாது- அட்வகேட் சண்முகசுந்தரம் சேர்வை(அகமுடையார்) அவர்கள் 1945ம் வருடம் அளித்த மனு விவரம்

அகமுடையார்களை கள்ளர் ,மறவருடன் இணைக்க முயற்சிப்பது அகமுடையார்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் – தீர்க்கதரிசியாக வருவதை முன்னுரைத்த சண்முகசுந்தரம் சேர்வை(அகமுடையார்) (அவர் அளித்த மனுவை முழுவதும் படியுங்கள் பல உண்மைகள் புரியும்)
——————————————–

1945 ஆம் ஆண்டு, அகில இந்திய முக்குலத்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரு K.சிவானாண்டித் தேவர் அவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் மூவருக்கும் பொதுவாக “தேவர்” என்று ஒரே பெயர் வைக்க வேண்டி அனுப்பிய கோரிக்கை மனுவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதுமிருந்து கள்ளர், மறவர், அகமுடையார் சங்கங்களின் சார்பாகவும், தனி நபர்களின் சார்பாகவும் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மனுக்களில் ஒன்றே இக்கடிதம்.

உயர்திரு, வழக்கறிஞர் V.சண்முகசுந்தரம் சேர்வை அவர்கள் தாக்கல் செய்த இந்த ஆட்சேபனை மனுவின் ஆங்கில மொழியின் சாராம்சத்தை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்து பதிவு செய்துள்ளோம்.

இந்த மனு 3 பக்கங்களை உள்ளடக்கியது. முழுமையாக படித்து தமது முன்னோர்களின், அகமுடையார் பேரினத்தவரின் தனித்தன்மை அரசியலின் தேவையை நன்கு உணர்வோம்.

 

அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம். ———————————————————-
பெறுநர்,
அரசு செயலர்,
வளர்ச்சி துறை,
மெட்ராஸ் அரசாங்கம்,
மெட்ராஸ்.

1) அகம்படியர் சமுதாயம் தன்னளவில் மகத்துவம் வாய்ந்த தனிச் சமுதாயமாகும். இச்சமுதாயம் தொன்றுதொட்டு வித்தியாசமான, மகத்துவமான கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் மற்றும் சம்பிரதாயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பழங்காலத் தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், செந்தமிழ் தொகுதி (வித்வான் இராகவ ஐயங்கார் அவர்களால் தொகுக்கப்பட்டது) மற்றும் பண்டையத் தமிழ் அகராதி முதலியவற்றில் அகம்படியர் சமுதாயத்தினரின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், கவுரவம், பாரம்பரியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே அகம்படியர் சமுதாயம் ஒரு பெருமை மிகுந்த பாரம்பரியமான தனி இனமாகும். இதற்குச் சான்றாக மேற்கண்ட தமிழ் இலக்கியப் புத்தகங்களிலிருந்து, அகம்படியர் இனம் பற்றிய மேற்கோள்களை தனியே எடுத்து அதன் சாரத்தை அச்சிட்டு நாங்கள் ஏற்கனவே மெட்ராஸ் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளோம். அவற்றின் நகல்கள் இங்கே தங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

2) கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாக கள்ளர் மற்றும் மறவர் சமுதாயத்தினர் இருவரும் அகம்படியர் சமுதாயத்திலிருந்து வேறுபட்டுள்ளனர் என்ற போதும், சமீபகாலமாக அவர்கள் அகம்படியர் சமுதாயத்தையும் தங்களோடு இணைந்து தங்களது அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஆதாயத்திற்காக “முக்குலத்தோர்” என்ற பொது இனமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

3) கள்ளர் மற்றும் மறவர் சமுதாயம் தனக்கென தனிக் கலாச்சாரத்தை உடையதால், அவர்களிருவரும் அகம்படியர் சமுதாயத்திலிருந்து மிகவும் வேறுபட்ட தனி இனம் அல்லது சமுதாயமாகும். கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற மூன்று இனத்தவருக்கும் பொதுவான கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் என்று இல்லை. எனவே அம்மூவருக்குள் திருமண உறவும் இல்லை. அப்படி ஒரு வேளை திருமண உறவு இருந்தாலும் அதை அகம்படியர்கள் அங்கீகரிப்பதில்லை.

4) மக்கள் தொகையைப் பொருத்தவரை மொத்தமாக கள்ளர் மற்றும் மறவர் இனத்தினரைக் காட்டிலும் அகம்படியர்களே எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக, மெட்ராஸ் அரசாங்கத்தின் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை பார்க்குமாறு வேண்டுகிறேன். மேலும் அகம்படியர்களில் பெரும்பான்மையினர் வேளாண்மைத் தொழில் செய்யும் விவசாயிகளாகவும், ஒரு சிலர் கவுரவமிக்க அரசு அலுவலர்களாகவும் உள்ளார்கள். ஆனால் கள்ளர் மற்றும் மறவர் இனத்தவர்கள், மெட்ராஸ் அரசாங்கத்தின் குற்றப்பிரிவு சட்டத்தின்படி, குற்றப்பரம்பரையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குற்றப்பரம்பரைச் சட்டம் கள்ளர் மற்றும் மறவர் இனத்திற்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது. அகம்படியர் சமுதாயத்தினருக்கு அல்ல.

5) மேற்கூறிய விளக்கங்களைத் தெரிந்து கொண்ட சூழ்நிலையில், கள்ளர் மற்றும் மறவர்களோடு அகம்படியர்களையும்
சேர்த்து “முக்குலத்தோர்” என ஒரே இனமாகக் கருதும் பட்சத்தில் அச்செயல் அகம்படியர் இனத்தவர்களின் மனதில் மோசமான அதிருப்தியை ஏற்படுத்தும். அதாவது மறைமுகமாக இச்செயல் அகம்படியர்களின் சுயமரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்தும். மேலும் அகம்படியர்களின் கலாச்சாரம், பண்பாடு முதலியவற்றிற்குப் பங்கம் விளைவிப்பதாகக் கருதப்படும். இது அகம்படியர்களுக்கு மோசமான மிகுந்த மன உளைச்சல்களையும், அதிருப்திகளையும் ஏற்படுத்தும் என்பதையும் அரசுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

6) கலாச்சாரம் மற்றும் பண்பாட்டால் வேறுபட்ட கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் இனங்களை ஒன்று சேர்த்து, “தேவர்” என்ற ஒரே இனமாக அரசு அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கள்ளர் மற்றும் மறவர் சமுதாயப் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக்க தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக எனக்கும், எங்களது அகம்படியர் சமுதாய மக்களின் மற்ற பிரதிநிதிகளுக்கும் தெரியவந்துள்ளது அத்தகைய கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது மூன்று சமுதாயத்தினரிடையே தவறான புரிதல்களையும் இதயபூர்வமாக மிகுந்த மன வருத்தத்தையும் மேலும் பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

7) எனவே, மூன்று சமுதாயத்தினரின் பொது நலன், கள, அமைதி மற்றும் சமாதான நல்லிணக்கம் கருதி
இக்கோரிக்கையை கைவிட்டு, இப்பொழுது இருப்பது போலவே கள்ளர், மறவர், அகம்படியர் என மூன்று தனிப் பிரிவினர்களாக இருப்பதே சிறந்தது என வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன். மேலும் மெட்ராஸ் அரசாங்கம் மேற்படி கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலிக்க நினைக்கும் பட்சத்தில், வெவ்வேறு மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் அகம்படியர்களின் பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் உள்ள பொது ஜன/ மகாஜன மக்களின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு நல்ல முடிவை எடுக்குமாறு வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

8) மேலும், இக்கோரிக்கையைப் பரிசீலிக்கும் மெட்ராஸ் அரசின் வளர்ச்சித் துறை ஆலோசகர் அவர்களை, அகம்படியர் சமுதாயத்தின் பிரதிநிதி என்ற முறையில் நான் நேரில் சந்தித்து எனது கருத்துக்களையும் மற்றும் ஆட்சேபனை களையும் எடுத்துரைக்க எனக்கு வாய்ப்பளிக்கும்படியும் வேண்டுகிறேன்.

10) எனவே, மேலே கூறப்பட்டுள்ள எனது ஆட்சேபனைகளையும், மற்ற அகம்படிய சங்கங்களின் பிரதிநிதிகளால் ஏற்கனவே அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ள ஆட்சேபனை மனுக்களையும் கருத்தில் கொண்டு, மூன்று இனங்களையும் “தேவர்” என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையைக் கைவிடுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அவ்வாறு “தேவர்” என ஒரே இனமாக அறிவிப்பதால், அது அகம்படியர்களுக்கு எந்த வகையிலும் நற்பலன்களைத் தராது என்றும் மேலும் அது நடைமுறைக்கு ஒத்து வராது என்றும், மாறாக இக்கோரிக்கை அகமுடையார்களுக்கு பின்னடைவையே தரும் என்றும் சமர்ப்பிக்கின்றேன்.

சண்முகசுந்தரம்,
வழக்கறிஞர்,
25-11-1945.
———————————————————–

ஆவண உதவி மற்றும் ஆவணம் தமிழாக்கம்: சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச: 94429 38890.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo