First
வட தமிழகத்தின் போர்குடி அகமுடையார்களின் தலைமையிடமான ராய #வேலூரில் இதுவரை அகமுடையாரை தவிர்த்து வேறு எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் வெற்றி பெற்றதில்லை.. இனியும் வெற்றி பெறப்போவதில்லை என்பது வரலாறு 🔥
ஏன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமுக ,அதிமுக, அமமுக ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அகமுடையார்களே!!
இந்த பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் வெண்கல சிலை போன்றே வேலூரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும்!
கட்சி பேதமின்றி உள்ளிருக்கும் போட்டி பொறாமைகளை கடந்து அனைத்து ஜாம்பவான்களும் ஒருசேர முயற்சித்தால் வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் திருவுருவச் சிலை வருவது உறுதி!!
இந்த முன்னெடுப்பு செய்யாமல் வருடம் ஒருமுறை குருபூஜைக்கு மட்டும் தலையை காட்டிக் கொள்வது “விழலுக்கு இறைத்த நீர்” போலத்தான்!!
எந்தவொரு அரசியல் கட்சித் தலைமையும் அந்தந்த மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமெனில் படைபலத்தை நிரூபித்தால் மட்டுமே சாத்தியம்!!
அதற்கான பொதுக்கூட்டங்கள் மாநாடு போன்றவை சிறந்த முன்னெடுப்புகள் ஆனால் அதற்கு யாரும் தயாராக இல்லை என்பது தெரிகிறது.
மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலை அமையும் பட்சத்தில் நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இலட்சக்கணக்கில் நம் இனம் குருபூஜை அன்று ஒன்று சேரும் என்பது எழுதப்படாத விதி!!
இதனை அரசியல் சாணக்கியத் தனமாக எடுத்துக் கொண்டு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுவிட்டால் நம் சமூகத்திற்கு தேவையான அரசியல் அங்கீகாரங்கள் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் அமைய வழிவகுக்கும்.
சிந்தித்து செயல்படுங்கள் அகமுடையார் இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகளே!! உங்கள் கையில் தான் இனத்தின் பிரதிநிதித்துவம் இருக்கிறது.
இதை முன்னெடுக்காமல் எனக்கென்ன என்று இருக்கும் பட்சத்தில் இத்தனை நாள் வரலாறு எளிதாக மாற்றப்பட்டு விடும் அபாயம் உள்ளது. உரிமை பறிபோகும் முன்பே தக்கவைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.
இல்லையேல் நாம ஒடுக்கப்பட்டோம் நசுக்கப்பட்டோம் என்று புலம்ப வேண்டியதுதான்.
#வேலூரில்_மாமன்னர்_மருதுபாண்டியர்_சிலை_வேண்டும்
இது வேலூருக்கு மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்