எந்தப் பிள்ளைமாருக்கு தேவர் பட்டம் இருக்கு? காராளன் ,பிள்ளை, தேவர் பட்டமும் ஒருங்கே கொண்டவன் அகமுடையான்டா!
காராள தேவர்ன்னாலே அது அகமுடையான்டா!
தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தேவர்,பிள்ளைப் பட்டம் கொண்ட காராள அகமுடையான்!
மேதகு பிரபாகரனின் முன்னான நரசிங்கதேவர் ,அகமுடையார் துளுவ வேளாளர் சாதியில் தேவர் பட்டம் கொண்டவர்! பிரபாகரன் பிறந்த ஊரில் அவர்களை
தேவர் (அகமுடையார் தேவர்) என்றுதான் இலங்கையில் இருந்து வரும் அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன.
இலக்கியச் சான்று, இலங்கையில் இருந்தே வரும் சான்றுகள்,கல்வெட்டுக்கள் போன்றவை எல்லாம் தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை அகமுடையார் என்றே தெரிவிக்கின்றன. ஆனால் தமிழராய் அனைத்து தமிழ் மக்களுக்கும் சொந்தமானவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை!
படம் 1 : தேவர்,பிள்ளை பட்டம் கொண்ட அகம்படி சாதியினன் – அகம்படி முதலிகளில் பெரியான் உய்யவந்தானான விக்ரமசிங்க தேவன் – காலம் 13ம் நூற்றாண்டு
படம் 2 : கருதுமுனை தீண்டாக் காராளன் -அகம்படியார் – ஆதாரம் : கணக்கன் கூட்டத்தார் பட்டயம் ,காலம் 15ம் நூற்றாண்டு
படம் 3: அகம்படி தேவர்- ஆதாரம் : கணக்கன் கூட்டத்தார் பட்டயம் ,காலம் 15ம் நூற்றாண்டு
மேலமண்டு ,கீழ்மண்டு அமைப்பில் உள்ள 81 கிராமங்களில் ராஜகுல அகமுடையார்களுக்கு காராளர் பட்டம் உண்டு ,காராள ஆண்டி இந்த ஊர் அகமுடையார்களின் முக்கிய குலதெய்வம், காராளம்,காராள ஆண்டி பெயர் வைப்பது இந்த ஊர் கிராமங்களில் உள்ள அகமுடையார்களுக்கு வழமையாகும்!
படம்: 4 -திருப்பரங்குன்றத்தில் உள்ள உலகாணி கிராம மண்டப பெயர் பலகையில் காரளம் பெயர் – பட உதவி: அண்ணன் Venkatesh Ogun
துளுவ வேளாளர் என்போர் அகமுடையாரில் ஒரு பிரிவினர் என்பதற்கு பிள்ளை,காரளர்,தேவர் பட்டங்களே சாட்சி! அகமுடையார்களுக்கும் அகமுடையாரின் பிரிவாகிய ,துளுவ வேளாளர்களும் ஒரே இனத்தில் இருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு இந்த இருவருக்கும் இருக்கும் காராளன்,பிள்ளை,தேவர் பட்டங்களே கண்கண்ட சாட்சி!
தமிழகத்தில் தேவர் பட்டம் கொண்ட பிள்ளைமார் ,அகமுடைய வேளாளர்(துளுவ வேளாளரை) தவிர வேறு யாரும் இல்லை!
படம் 5: நரசிங்க தேவன் – துளுவ வேளாளன்( அகமுடையார்) -தேவன் பட்டம் கொண்ட அகமுடைய வெள்ளாளன் ஆதாரம்: கையிலாய மாலை – காலம்
படம் 6: மேற்குறிப்பிட்ட நரசிங்க தேவன் தான் பிரபாகரனின் முன்னோன்- மயிலிட்டி இணையதளத்தில்
பிரபாகரனின் முன்னோர்கள் பற்றி இலங்கையில் இருந்து வரும் செய்திகள்!
ஐயக்கதேவர் வம்சத்தில் வந்தவரே வேலுப்பிள்ளையும் அவர் மகன் பிரபாகரனுமாகும். ஐயக்கதேவர் பின் கரியதேவர் – காராளர் – ஐயன் – வேலர் – ஐயம்பெருமாள் – வேலாயுதர் – திருமேனியர் – வெங்கடாசலம் – குழந்தைவேற்பிள்ளை – வேலுப்பிள்ளை – திருவேங்கடம் – வேலுப்பிள்ளை – பிரபாகரன் என்பதே இந்த வம்சத்தின் படிமுறையான வளர்ச்சியாகும்.ஐயக்கதேவரின் முன்னோன் தான் மயிலிட்டியில் குடியமர்ந்த துளுவ வேளாளனான(அகமுடையாரான) நரசிங்கதேவன் .
http://www.vannionline.com/2010/01/blog-post_3233.html
இன்னும் சந்தேகம் இருப்பவர்கள் பிரபாகரன் அவர்கள் பிறந்த வல்வெட்டியிலும் அவர் உறவினர்கள் உள்ள வல்வெட்டித்துறைப் பகுதியிலும் நன்றாக விசாரித்துக்கொள்ளலாம்!
நிறைய இருக்கு !தொடர்ந்து ஆராய்வோம் ,பேசுவோம்!
Source Link:
Source
Leave a Reply