First
துளுவ வேளாளர், வாணர் குல அரசர்கள் அகம்படியர்களே – கல்வெட்டறிஞர் எஸ்.இராமச்சந்திரன் கருத்துக்கள்
துளுவ வேளாளர் அகம்படியரின் பிரிவினரே- தொடர்
———————————–
வாணர் குலத்து அரசர்கள் , துளுவ வேளாளர் என்போர் அகம்படியர் சாதியின் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதற்கு முந்தைய பதிவுகளில் முதன்மை கல்வெட்டு ஆதாரங்களை வெளியிட்டு வந்துள்ளோம்.
இனி முதன்மை கல்வெட்டு ஆதாரங்களோடு வரலாற்றிஞர்கள் கருத்தையும் பதிவு செய்ய உள்ளோம் அவ்வகையில் இன்றைய பதிவில் வரலாற்றிஞர் எஸ் .இராமச்சந்திரன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை பார்ப்போம்.
எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் கல்வெட்டு,இலக்கியங்களில் தேர்ந்த வரலாற்றிஞர் ,பார்ப்பனர்(பிராமணர்) வகுப்பை சேர்ந்தவர் இவர் “தமிழக வேளாளர் வரலாறு” என்ற தொடரை தமிழினி இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
அதில், ஜீன் 2011 வருடத்திய தமிழினி இதழ் 26 தொடரில்
“மாவலி வாணர் என்போர் மறக்குல அகம்படியர் ” பிரிவை சேர்ந்தவர் என்பதையும் ,அவர்கள் முதன்மையான சத்திரியர் வகுப்பை சேர்ந்தவர் என்பதையும் ,அரசபுத்திரர் ,உள்மனையார், வாளின் வாழ்நர் என்று அழைக்கப்பட்ட பல்வேறு செய்திகளை குறிப்பிடுகின்றார்.
(பார்க்க இணைப்பு 1)
அடுத்து
சத்திரிய வர்ணத்தவரான அகம்படியர், கங்கர் குலத்தவர்களுடன் கொண்ட திருமண உறவுகள் காரணமாக கங்கா குலத்தவர் என்று அழைக்கப்பட்டதோடு அகம்படியர்கள் துளுவ வேளாளர் என்றும் அழைக்கப்பட்டதாக கூறுகின்றார்.
( பார்க்க இணைப்பு 2)
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையத்தில் இக்கட்டுரையை பார்க்க முடியும்.
http://www.sishri.org/tvv11.pdf
ஆகவே துளுவ வேளாளர் என்று இன்று அறியப்படுவர்கள் அகம்படியர் என்ற சாதியினரின் பிரிவினரே என்பதை சரித்திர செம்மல் கிருஷ்ணமுர்த்தி, இல.தியாகராசன் அவர்களை தொடர்ந்து கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களும் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு:
எஸ். இராமச்சந்திரன் மட்டுமல்ல எந்த வரலாற்று அறிஞர் கருத்தையும் கண் மூடித்தனமாக நாம் எடுத்துக்காட்டுவதில்லை.
முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு ஆதாரங்கள் செய்தியை மேற்கோள் காட்டி அதில் உள்ள உண்மைகளை விளக்குகின்றோம்.
ஆனால் அதிலும் சிலர் இல்லை,இல்லை நீங்கள் கல்வெட்டில் உள்ள வாசங்களுக்கு நீங்கள் தவறாக விளக்கம் அளிக்கிறீர்கள் என்பார்கள்.
அந்த மாதிரியான நேரத்தில் கல்வெட்டு வரலாற்று அறிஞர்களின் விளக்கத்தை நாம் சொல்லும் கருத்துக்கு வலுசேர்க்கும் மேற்கோளாக காட்டி விளக்குகின்றோம். அதே நேரம் வரலாற்றிஞர்க்களே ஆயினும் ஆதாரமே இல்லாமல் கூறும் கருத்துக்களை ஏற்பதில்லை.
குறிப்பிட்ட்ட கல்வெட்டுக்களில் மறம் (வீரம்) என்ற பொருளில் தான் வாணர்களை குறிக்கிறதே தவிர
“மறக்குலம்” என்பது கூட திரு.இராமச்சந்திரன் அவர்கள் மிகைப்படுத்தி /ஏற்றிக்கூறும் கருத்துக்கள் ஆகும். அதற்கும் கல்வெட்டின் முதன்மை செய்திக்கும் சம்பந்தம் இல்லை. அது
மறக்குலம் என்று அவர் தானாக சொல்வது கூட வீரக்குடியினர் /சத்திரியர் என்று பொருளை குறிப்பதற்காக அவர் பயன்படுத்தியிருப்பார் என்றே கருதுகிறோம்.
மேலதிக செய்திகள்
————-
இன்றைய அக்கமுடையார் , ஆயர்(இன்றைய கோனார் அல்லது யாதவர்) , பார்க்கவ குலத்தவர் , ஆசாரிமார்(தட்டான்) , கைகோளர் போன்ற பல்வேறு சாதிகள் ஆயிரக்காணக்கான வருடங்கள் முன்பே முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு செய்திகளில் மறம் என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வேளாளர் என்பது குறித்து இன்று நிலவி வரும் புளுகு மூட்டைகளை எஸ்.இராமச்சந்திரன் தனது “தமிழக வேளாளர் வரலாறு” என்ற நூலில் உடைத்துள்ளார்.
வேளாளர் என்போர் எத்தகையவர் , வேளாளர் என்பவர்களின் உண்மை வரலாறு குறித்து எஸ்.இராமசந்திரன் அவர்கள் எழுதியுள்ள முழு நூல் இணையத்தில் கிடைக்கின்றது. அவர்களின் உண்மை வரலாறு என்ன என்பது குறித்து விரிவாக அவர் எழுதியுள்ள்ளார். நேரம் இருப்பவர்கள் நிச்சயமாக இதை படிக்க வேண்டும்.
https://archive.org/download/20200502_20200502_0645/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
நம்மை மறசாதிக்குள்ளும் வேளாளர் வர்ண கூட்டத்துக்குள்ளும் சேர்க்க சில கயவர்கள் எடுத்துவரும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதுபோல உள்ளது உங்களின் பதிவு..
நீங்கள் கூறியதுபோலவே ஷத்திரிய குடி அகம்படியர் என்பதை குறிப்பதற்காக தமிழ்ச் சொல்லாகவே மறக்குல அகம்படியர் என்பதை குறிப்பிட்டுள்ளனர்..
இந்த பதிவுக்கு சிரிக்கிறான் பாருங்கள் புண்ணை மகன்
அருமை
சகோ வேளீர் யார் ?
உண்மையில் வேளீர் என்பவர்
யாதவரா
பல்லவர்களா
வேளர்களா
அருமையான தகவல்……மறக்குடி அகம்படியர்…..🙏🙏🙏🙏 வரலாற்று தேடல் தொடரட்டும்…….மகிழ்ச்சி
மறம்:- வீரம்
மறவர்:- வீரர்
மறக்குலம்:- வீரர்குலம்
மறக்குடி:- வீரக்குடி….
மறக்குடி அகம்படியர்:- வீரக்குடி அகமுடையார்……..சத்திரிய குலம்👍👍👍👍👍