First
2000 வருடங்கள் முன்பதான ஹரிவம்சத்தில் தானவ,தைத்ய குலம் என குறிப்பிடப்படும் மகாபலி
———————————————–
ஹரிவம்சம் என்பது மஹாபாரத்தின் இணைப்பு நூலாகவும் ,வியாசர் எழுதியதாகவும் கருதப்படுகிறது.
இது கி.மு முதலாம் நூற்றாண்டில் எழதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த பழமையான நூலில் மகாபலி மன்னரை தைத்யர் என்றும் தானர் குலத்தவன் என்றும் குறிப்பிடுவதை காணலாம்.
ஓ! பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னா, பெரும்படைப்பாளனான பிரம்மன், தேவர்களின் மன்னனான சக்ரன், யமன், வருணன் ஆகியோர் செய்த வேள்விகளை எல்லாம் உன் வேள்வி விஞ்சிவிட்டது.(1-2)
வைசம்பாயனர், “தைத்திய மன்னன் பலி, குள்ளனின் {வாமனனின்} சொற்களைக் கேட்டுப் பெரும் நிறைவடைந்தான்.{8}
குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவா, அரசையோ, வாகனங்களையும், ரத்தினங்களையோ, பெண்களையோ நான் வேண்டவில்லை. நீ நிறைவடைந்தால், உன் மனம் அறத்தில் நிலைத்திருந்தால், என் ஆசானின் வேள்வி இல்லத்தைக் கட்டுவதற்காக மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படக்கூடிய} நிலத்தை நான் உன்னிடம் வேண்டுகிறேன். நான் வேண்டும் உயர்ந்த பொருளை எனக்கு அளிப்பாயாக” என்று கேட்டான்.(10,11)
சுக்கிரர், “ஓ! தைத்திய மன்னா, இவனுக்குக் கொடையேதும் அளிக்காதே. நிச்சயம் இவன் விஷ்ணுவே என்பதை நான் அறிவேன். அற்புதமான பக்தி இங்கே பொருந்தி அமைவதேன்?” என்றார்.{18}
குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களில் பாவமற்ற மன்னா, என் மூன்று காலடிகளில் மறையும் நிலம் எனக்குப் போதுமானதாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது உண்மைதான். அஃது ஒருபோதும் வேறுவகையாகாது” என்றான்”.(21)
வைசம்பாயனர், “பகைவரைக் கொல்பவனும், விரோசனின் மகனும், தைத்தியர்களின் மன்னனுமான பலி, பெரும்பிரகாசமிக்கக் குள்ளனின் சொற்களைக் கேட்டு அவனது மேனியில் ஒரு மான்தோலைப் போர்த்தினான்.{22} பிறகு “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி நீர் நிறைந்த குடுவையொன்றைத் தீண்டினான்.{23} குள்ளனும் {வாமனனும்}, அசுர மன்னனின் அழிவை விரும்பி, அழிவைத் தரும் தன் கைகளை நீட்டினான்.{24} தானவர்களின் மன்னன் கிழக்கு நோக்கி நின்று, அவனிடம் நீரைக் கொடுக்க எத்தனித்தபோது பிரஹ்லாதன் அவனைத் தடுத்தான்.{25}
பிரஹ்லாதன், “ஓ! தானவர்களின் மன்னா, இந்த விப்ரனுக்கு கொடையேதுமளிப்பதாக உறுதியளிக்காதே. இவனை விப்ர இளைஞனாக நான் கருதவில்லை. ஒரு பிராமணன் இவ்வாறு இருக்க மாட்டான்.{32} இவனது வடிவைக் கண்டு நரசிங்கமே மீண்டும் திரும்பிவிட்டதாக உண்மையாகவே நான் நம்புகிறேன்” என்றான்.{33}
குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களின் முதன்மையானவனே, நான் மொத்த பூமியை வேண்டவில்லை. மூன்று காலடிகளில் மறையும் நிலத்தில் நான் நிறைவடைகிறேன். இதுவே நான் விரும்புவதும், வேண்டுவதுமாகும்” என்றான்”.{41}
வைசம்பாயனர், “தானவ மன்னன் பலி, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, அளவற்ற ஆற்றல் படைத்த தலைவன் நாராயணனின் மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைத் தீண்டச் செய்தான்.{42} அவனுடைய கை நீரில் நுழைந்தபோது, குள்ளனான அந்தத் தலைவன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி தன் அண்ட வடிவை வெளிப்படுத்தினான்.{43}
ஹரிவம்சத்தின் பவிஷ்ய பர்வம் பகுதி 46 ஐ மட்டும் எடுத்துக்கொண்டால்
இங்கு 1,10,21,25,33,41,43 பாடல்களில் பலி மன்னர் தானவ அரசன் என்றும் அதே பலி மன்னர் 8,18,22 பாடல்களில் தைத்ய குலத்தவன் என்றும் குறிப்பிடப்படுவதை காணலாம். ஆகவே தைத்யர் ,தானவர் என்றும் பாணர்(வில்) அல்லது வாணர் குலத்தவருக்கான இருபெயர்கள் என்பதை உணரலாம்.
இந்த தானவர் வழிவந்தவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பதாக மட்டுமல்ல 1000 ஆண்டுகளுக்கு முன்பதான தமிழ் கல்வெட்டுக்கள் தொடங்கி அகம்படியர்களாக ( அகமுடையார்களாக) இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதை பற்றி வருகின்ற நாட்களில் பதிவு செய்வோம்.
மேலே உள்ள பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கிழே கொடுத்துள்ளோம்.
1-2. Vishnu said:—”What a wonderful sacrifice is this undertaken by the king of Asuras. There are various sorts of well prepared edibles. O highly powerful Danava king, your sacrifice has excelled that of the Great Creator Brahma, that of Sakra the king of the celestials and that of Yama, and Varuna
Vaishampayana said:—Hearing those words of the Dwarf, Bali, the king of Daityas, was highly pleased.
10-11. The Dwarf said:—”O Danava, I do not pray for kingdom, conveyances, jewels or women. If you are pleased, if you have your mind fixed on virtue, I pray from you for ground covering three foot-steps for the construction of the sacrificial house of my preceptor. Grant me this which is the highest object I pray for”
18-20. Shukra said:—”O Daitya-king, do not make him any present. Forsooth I have come to know that he is Vishnu. What wonderful devotion! You have been imposed upon.”
22-24. Vaishampayana said:—Hearing those words of the highly effulgent Dwarf, Virocana’s son Bali, the king of Daityas and the slayer of his enemies, threw an antelope skin on his person. And then saying ‘let it be so’ he touched a jar full of water. Desirous of destroying the Asura king the Dwarf too extended his hand destructive of Daityas. As the king of Danavas, with his face towards east, was about to give him water Pralhada prevented him.
29-34. Pralhada said:—”O king of Danavas, do not promise to give anything unto this Vipra. I do not consider him a Vipra youth. A Brahmana is not like it. Beholding his form I think forsooth that the Man-lion has returned again.” Thus addressed by Pralhada of unlimited energy, Bali, as if remonstrating with him, said.
41-43: “O foremost of Danavas, I do not pray for the entire earth. I am satisfied with land covering three foot-steps. This is what I like and pray for”
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்