வாணாதிராயர்கள் பிரிவில் தோன்றிய சோழர்கள் (சோழ ரகசியங்கள்)
————————————–
சோழர்கள் யார் ? சோழர்கள் எந்த மரபில் தோன்றினார்கள்? 2500 வருடங்களுக்கு முன் எங்கிருந்தார்கள்? எப்படி அரசாட்சியை உருவாக்கினார்கள் என்பதை விளக்கும் தொடரின் ஒர் பகுதி இது!
வாணர் எனும் பழந்தமிழ் மரபிலேயே சோழர் எனும் புகழ்மிக்க குடி தோன்றியது. அதை சுருங்க விளக்குவதே இப்பதிவு.
மாபலி மன்னர் வாணர் குலத்தை தோற்றுவித்தவர் என்பதை பலரும் அறிந்ததே .வாணர் குலங்களின் பல்வேறு கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் மகாபலி வாணாதிராயர் என்று மகாபலி வம்சத்தை குறிப்பிட்டே வாணர்களின் கல்வெட்டு மற்றும் செப்பேடுகள் தொடங்குவதே இதற்கு பெரும் சான்று.
அத்தகைய மகாபலி வம்சத்திலேயே சோழர்கள் தோன்றியதாக செப்பேடுகள் மற்றும் கலிங்கத்துபரணி போன்ற இலக்கியங்கள் காட்டுகின்றன.
உதாரணத்திற்கு இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடு 19ம் சமஸ்கிரித பாடலில்
சோழர் வம்சாவளியை கூறும் போது,பிருதுலாக்ஷணன் என்பவனை சோழ முன்னோனாக குறிப்பிடுகின்றது.
ஆதாரம்: இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பக்கம் எண் 52
பார்க்க இணைப்பு: 1
இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு கூறும் சோழ வம்சாவளி வரிசையில் பிருதுலாக்ஷணன்
ஆதாரம்: மேற்கண்ட நூல்: பக்கம் எண் 25
பார்க்க இணைப்பு: 2
சரி! பிருதுலாக்ஷணன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன்
அங்கவம்ச மாபலி மன்னனுக்கு எட்டாவதாகப் பிறந்தவன் தான் பிருதுலாக்ஷணன் எனும் மன்னன் என்று விஷ்ணுபுராணம் குறிப்பிடுகின்றது.
ஆதாரம்: மேற்கண்ட நூல்: பக்கம் எண் 52
பார்க்க இணைப்பு:1
அதே போல் கலிங்கத்து பரணி, சோழ வம்சாவளிகளை பட்டியலிடுகின்ற போது சோழ மன்னனின் சிபி சக்கரவர்த்தியின் தந்தையாக பிருதுலாக்ஷணனை குறிப்பிடுகிறது.
ஆதாரம்:: நூல்: மூவருலா பக்கம் எண் 100
பார்க்க இணைப்பு: 3
சரி பிருதுலாக்ஷணன் என்பது கூட நீங்கள் அறியாத பெயராக இருக்கலாம்.ஆனால் புறாவிற்காக தனது சதையை அறுத்து தந்த சோழ மன்னன் சிபி சக்கரவர்த்தியை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள்!
இந்த சிபி சக்கரவர்த்தி யார் என்றால் பிரகலாதன் என்பவரின் மகனாவார். பிரகலாதன் என்பவன் இரணியன் எனும் அசுர குலத்தவனின் புதல்வன் ஆவார். அசுரகுலத்தில் பிறந்த பிரகலாதனே விஷ்ணு பக்தனாகவும் நரசிம்ம அவதாரம் தோன்றவும் காரணமாகவும் இருந்தவர்.
குறிப்பிட்ட இந்த அசுரர்கள் வேறு யாருமல்ல தனு என்கிற அரக்ககுல பெண்ணின் வழியில் வந்தவர்கள்.
இப்படிப்பட்ட அசுர குலத்தில் உதித்த பிரகலாதனுக்கு
பிறந்தவர்களே சிபி,பாஷ்கலன் மற்றும் விரோசனன் எனும் மூன்று பிள்ளைகளாவர்.
ஆகவே கல்வெட்டு ,செப்பேடு,இலக்கியம் என எல்லாவற்றிலும் சோழர்கள் தங்கள் முன்னோனாக குறிக்கும் சிபி சக்கரவர்த்தி வேறு யாருமல்ல! வாணர்கள் போல அசுரகுலத்தில் உதித்தவரே!
சரி வாணர் குல மூதாதையான மாபலி(மகாபலி) என்பவர் யார் என்றால் சிபி சக்கரவர்த்தியுடன் உடன்பிறந்த விரோசனனின் மகனாவார். அதாவது மகாபலி என்பவரின் தந்தையுடன் உடன்பிறந்தவர் தான் சிபி சக்கரவர்த்தி
ஆதாரம்: புராண ரத்தினம் எனும் விஷ்ணுபுராணம் ,பக்கம் எண் 98
பார்க்க இணைப்பு: 4
மகாபலி விரோசனனின் மகன்( விரோசன சுதன்) , பிரகலாதனின் மகன் விரோசனன் ( விரோசனன் சுதன்)
ஆதாரம்: தமிழ்மொழி அகராதி,பக்கம் எண் 1298
ஆசிரியர் : கதிர்வேல் பிள்ளை
பார்க்க இணைப்பு: 5
மேலும் விரோசனன் என்பதற்கு சூரியன் என்பதுவும் இதனை உறுதி செய்யும்.
பார்க்க இணைப்பு: 5
இதில் இருந்து சோழர்களும் வாணர்களும் ஒரே குடி என்பது விளங்கும். ஆனால் உண்மையில் சோழர்களின் முன்னோர்கள் வாணர்கள் ஆவர் அதை வரும் காலங்களில் விளக்குவோம்.
மேலதிக தகவல்கள்
——————-
வாணர் குல முதல்வனான மகாபலி மற்றும் அவர்களது முன்னோர்களின் அசுர குலமானது தானவர் எனும் அசுர குல பிரிவை சேர்ந்தது. இவர்கள் தனு என்ற அசுர குல பெண்ணின் வந்தவர்கள் என்பதால் தானவர் என்று அழைக்கப்பட்டனர்.
தானவர், அவுணர்,தைத்தியர் என்பவர்கள் அசுரர் என சேந்தன் திவாகரம் கூறுகின்றது.
ஆதாரம் : சேந்தன் திவாகரம் ,பக்கம் எண்
பார்க்க இணைப்பு : 6
இந்த இராக்கதர்கள் எனும் அசுரர்களை விஷ்ணு வென்ற பின் அந்த இராக்கதர்கள் சிவபக்தர்கள் எனபதனால் சிவபெருமானின் கயிலையை பாதுகாக்கும் அகம்படியினராக பணித்ததாக புராணங்கள் கூறுகின்றனர்.
ஆதாரம்: திருவாசகம் பாடல் 321, ஆசிரியர்: தண்டபாணி தேசிகர்
பார்க்க: இணைப்பு : 8
சிவபெருமானின் வாயிலை காவல் காக்கும் காவலர் என அகம்படி தொழில் செய்பவர்களாக பிற்காலத்தில் மாபலி வழிவந்த அசுரர்களான வாணாதிராயர்கள் தங்களை 5க்கும் மேற்பட்ட கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் குறித்துளனர் என்பது வாணர்கள் தானவர்,அசுரர் எனும் அகம்படியர் இனத்தவர் என்பதை விளக்கும்.
ஆதாரங்கள் தென் இந்திய கல்வெட்டு தொகுதி 3, பக்கம் எண் 91, கல்வெட்டு விளக்கவுரை பக்கம் எண்கள் 103,104 ஆசிரியர் : சுந்தரேச வாண்டையார்
பார்க்க இணைப்பு: 9 ,10
தானவர் பலகாலம் முன்பே(2000 வருடங்கள் முன்பே) வேட்டையை கைவிட்டு நாகரீக(நகர) குடிகளாக மாறிவிட்டனர். இன்னும் சொல்வதென்றால் குறிஞ்சி நிலத்தில் தோன்றி நாகரீக(நகர) அரசை தோற்றுவித்த தொல் பழங்குடிகள், அகமுடையார்கள் தான்.
சோழர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வேந்தர்களாகவும் வாணர்கள் (முற்கால சேரர்) அதற்கும் முன்பு 2500 வருடங்களுக்கு முன்பு சக்கரவர்த்தி (பேரரசர்) என்று குறிக்கப்பட்டுள்ளதும் இதற்கு சான்றுகள் ஆகும்.
பாண்டிய மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்பான சங்ககால பாடல்களில் மாவலி அரசனை வீழ்த்தியதாக பெருமை கொள்கிறான். ஆனால் 2000ம் வருடத்தில் மகாபலி அரசர் வாழவில்லை ,தொன்மை கதைகள், மஹாபாரதம் போன்ற இதிகாச பாடல்கள் மூலம் மாபலி அரசர் 2500-3000 ஆண்டுகளில் வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
பெரும் பேரரசன் என்பதனால் மாபலியை வென்றதாக பாண்டிய அரசர் பெருமை பேசி இருக்கலாம். சங்கப்பாடல் மட்டுமல்ல கி.பி 8,10 நூற்றாண்டுகளில் பாண்டியர் மற்றும் அவரது சகோதர அரசுகளான கேரள ஆய்(ஆயர்) அரசுகள் கூட மாபலியை, வல்லபன் எனும் பாண்டிய மன்னன் வென்றான் என்று பெருமை பேசுகின்றன.
வாணர்கள் பிரிவிலேயே சோழர்கள் தோன்றினர். சோழர்களுக்கு முன்பே வாணர்கள் ஆட்சியை நிறுவினாலும் பேரரசாக திகழ்ந்தாலும், சோழர்கள் ஆற்காடு,வல்லம், காவேரி பூம்பட்டினம் போன்ற பகுதிகளில் நிலையாக ஆட்சியை நிறுவினர்.
ஆனால் வாணர்கள் தங்களுக்கு பின்னால் தோன்றிய பாண்டியர்களாலும் ,பாண்டியர்களை பின்பற்றி எழுந்த பிற்கால சேர அரசமரபாலும் சிதறுண்டனர்.
தானவர்கள் என்போர் குறவர், எயினர் போன்று குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குடிகள் தான் ஆனால் இவர்களும் எயினர்களும் வேறுபட்ட குடியினர்.
ஆதாரம்: தமிழர் பண்பாடும் தத்துவமும், பக்கம் எண் 462, ஆசிரியர் வானமாமலை
பார்க்க இணைப்பு: 7
குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தானவர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் பெற்ற முழுமையாக எழுந்துவிட மற்ற குறிஞ்சி நில குடிகளான குறவர், எயினர் போன்றோர் பலநூற்றாண்டுகள் பழங்குடி தன்மையிலேயே நிலைத்து இருந்ததை இலக்கியங்கள் சுட்டுகின்றன.
சிந்து சமவெளியில் வாணர்கள் கோட்டை கட்டி ஆட்சி செய்த நாகரீக குடிகளாக வாழ்ந்ததை 2500 வருடங்களுக்கு மேற்பட்ட ரிக்வேதத்தில் சான்று உள்ளது.
இவ்வாறு 3000 ஆண்டுகளுக்கு முன்பே கோட்டை கட்டி ஆட்சி செய்த இந்த அரசமரபே ,ஆரியர்களின் வருகை காரணமாக காட்டிற்குள் துரத்தப்பட்டு குறிஞ்சி நிலத்தில் உட்புகுந்தது.
பார்க்க இணைப்பு: https://www.agamudayarotrumai.com/13702/
இருப்பினும் தானவர்கள் தங்கள் அடையாளம் ,பண்பாடு போன்றவற்றை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததை பல்வேறு சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.
3000 வருடத்திற்கு முன்பு ரிக்வேதத்தில் குறிக்கப்படும் இந்த தானவர்களின் மரபு இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் சேந்தன்குடி ஜமீனாக அறந்தாங்கி பகுதியில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
பார்க்க: https://www.agamudayarotrumai.com/13949/
அகமுடையார்கள் இன்றும் வழிபடும் இராக்காயி ,இருளாயி போன்றோர் இராக்கதர் எனும் அசுரர்களின் வடிவங்கள் ஆவர்.
அகமுடையார்கள் குறிஞ்சி நிலத்தில் தோன்றியவர்கள் என்று முன்னர் சொன்னதெற்கெல்லாம் இவை ஆதாரமாக விளங்குகின்றன. இதையும் இன்னொரு நாள் விரிவாக விளக்குவோம்.
குறிப்பு:
மேலே குறிப்பிட்ட செய்தி ஒவ்வொன்றுக்குமே நூற்றுக்கணக்கில் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றையும் கூறினால் உங்களால் படிக்க முடியாது என்பதால் ஒரு சில ஆதாரங்களை மட்டும் பதிவில் குறிப்பிடுள்ளோம்.
வெறும் செப்பேடு மற்றும் இலக்கிய சான்றுகளை மட்டும் வைத்து இக்கருத்துக்களை கூறவில்லை. பல்வேறு தரவுகளை வைத்து ஆராய்ந்தே இச்செய்திகளை கூறுகின்றோம். வரும் காலங்களில் இன்னும் விளக்கமாக கூறுகின்றோம்.
புராணத்தில் உள்ள கருத்துக்களை நாம் எப்போதும் ஏற்பதில்லை.புராணத்தில் உள்ள மறைபொருளை உண்மையை உணர்த்துவதே நமது நோக்கமாகும். உதாரணத்திற்கு
சூரியனிடமிருந்து மனிதர்கள் தோன்றுவது என்பது புராணக்கருத்து ஆனால் இது அறிவியலுக்கு புறம்பானது என்பதோடு நம்பக்குடிய விடயம் அல்ல.ஆனால் குறியீடுகள் மூலம் அடையாளப்படுத்துவதன் வழியாக வரலாற்று ரீதியான தொடர்பை விளங்கிக்கொள்ளவும் உண்மையை கண்டறியவுமே பயன்படுத்துகின்றோம்.
தொடர்ந்து உண்மைகளை வெளிப்படுத்துவோம்.
மேலும் படியுங்கள்
சோழர் பெயர் காரணம் என்ன? ———————– சோழன்,சோழர் என்பதன் பெயர் கார…
குறிஞ்சி நிலத்தில் தோன்றிய சோழர் -சோழ ரகசியங்கள் ——————–சென்ற பதி…
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்