கொடைக்கானலில் அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டரீஸ் சிறப்பு “தொழில்…

Spread the love

கொடைக்கானலில் அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டரீஸ் சிறப்பு “தொழில் பயிற்சிப்பட்டறை” நடைபெற்றது
———————
அகமுடையார் சமுதாயத்தில் வணிகம் மற்றும் தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கோடு
மதுரையை தலைமையிடமாக கொண்டு அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டரீஸ் (ACCI) எனும் அமைப்பு நிறுவப்பட்டு சிறப்பாக செய்ல்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்!

இந்நிலையில் ACCI சார்பில் அதன் உறுப்பினர்களுக்கான சிறப்பு “தொழில் பயிற்சிப்பட்டறை” கோடை இளைப்பாறுதல் ஊரான கொடைக்கானல் நகரில் உள்ள ஸ்டேட்டஸ் ஹில் பார்க் ஹோட்டலில்(Status Hill Park Hotel) கடந்த இரண்டு நாட்களாக (24 மற்றும் 25 ஜீன் ,2023) அன்று சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது.

  • நிகழ்வில் ACCI அமைப்பிற்கான வெப்சைட்டை துவங்கி வைத்தல் (Website Launching)
  • கேளிக்கையுடன் கூடிய குழு உருவாக்கம் செய்யும் செயல்பாடுகள் (Fun Team Building Activitites)
  • ACCI அமைப்பிற்கான பிரத்யேக டி-சர்ட் வழங்குதல் (T-Shirt Distribution)
  • கருத்து பரிமாற்றம், இரவு உணவு மற்றும் இசை ( Camp Fire ,Gala Dinner &DJ)

போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

அகமுடையார்களில் 10 தனிநபர்களே ஒன்றாக இணைந்து தொடர்ந்து பயணிக்காத சூழ்நிலையில் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ந்து ஒற்றுமையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு வரும் ACCI அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அகமுடையார் ஒற்றுமையின் சார்பாக வெகுவாக பாராட்டுகின்றோம்.

நிகழ்வு நடந்த கொடைக்கானல் Status Hill Park Hotel , திரு.மயில்வாகனன் எனும் அகமுடையாரால் நடத்தப்படுவதாகும்.இவரும் நமது ACCI அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.

இந்த நேரத்தில் கொடைக்கானல் Status Hill Park Hotel ஹோட்டல் பற்றி ஒரிரு வார்த்தை சொல்ல வேண்டும். இந்த ஹோட்டல் கொடைக்கானலில் உள்ள அழகான ஹோட்டல்களில் ஒன்றாகும். தோற்றப்பொலிவும், சுத்தமான அறைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை கொண்ட இந்த ஹோட்டல் சேவையை அகமுடையார்கள் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
(இது போன்ற அகமுடையார் நிறுவனங்களில் அகமுடையார் சமுதாய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் அகமுடையார் சமுதாய மக்களுக்கு வேலைவாய்ப்பு பெறவும் வரும்காலங்களில் அகமுடையார் ஒற்றுமையால் முயற்சி மேற்கொள்ளப்படும்)

ACCI வெப்சைட்டில் டைரக்டரி பக்கத்தில் இதுவரை இதுபோன்று அகமுடையாரால் நடத்தப்படும் 100க்கும் மேற்பட்ட பிசினஸ்கள் புகைப்படங்கள் மற்றும் தொடர்பு தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ACCI வெப்சைட் அகமுடையார் ஒற்றுமை நிர்வாகியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாய்பு வழங்கிய ACCI நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அகமுடையார் உறவுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

விரைவில் அகமுடையார் ஒற்றுமை யூடிப் தளத்தில் இந்த வெப்சைட் பற்றிய அறிமுகம் ( வெப்சைட் மற்றும் அதை பயன்படுத்துவது பற்றி அறிமுகம்) வழங்கப்படும்)

ஆகவே அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து பெல் பட்டனை கிளிக்செய்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய வீடியோ வரும் போது உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்

அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனல் லிங்க்:
https://www.youtube.com/agamudayarotrumai

அதே நேரம் நீங்கள் அகமுடையாராக சமுதாயத்தை சேர்ந்தவராகவும் ,உலகத்தில் எந்த பகுதியிலும் தொழில் வணிகம் ,கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளை நடத்துவராகவும் இருந்தால் நீங்கள் நமது அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டரீஸ் அமைப்பில் உறுப்பினராக இணைய முடியும்.

விருப்பமுள்ளவர்கள்

agamudayarchamber.acci@gmail.com

என்ற இ-மெயில் முகவரிக்கு உங்கள் தகவல்களை மின் அஞ்சல் செய்யுங்கள்!

இப்பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை கமேண்டில் தெரிவியுங்கள் அகமுடையார் உறவுகளே!

புகைப்படங்கள் உதவி: அண்ணன் திரு.Venkatesh Ogun அகமுடையார் அவர்கள்






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo