இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படிய வெள்ளாளர் பற்றி வலங்கை சரித்திரம் தரும் செய…

Spread the love

First
இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படிய வெள்ளாளர் பற்றி வலங்கை சரித்திரம் தரும் செய்திகள்
————————————————————————–

கி.பி 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதநாயக சாஸ்திரியால் தொகுப்பட்டு மெக்கன்ஸி எனும் ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்ட “வலங்கை சரித்திரம்” எனும் சுவடி செய்தி வழியாக இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படிய வெள்ளாளர் என்பவரை பற்றி பல்வேறு செய்திகள் தெரிய வருகின்றது.

இந்த சுவடி வழியாக தெரிய வருகின்ற மற்ற உணமைகளை ஆராயும் முன்பு இச்சுவடியில் உள்ள கருத்துக்களை பார்ப்போம்.

அதாவது இந்த சுவடி கருத்தின்படி 17ம் நூற்றாண்டிலே தஞ்சாவூருக்கு 10 நாழிகை தொலைவிலே தச்சன்குறிச்சி எனும் ஊரிலே அந்த ஊரின் நாட்டாண்மையாக இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படிய வெள்ளாளர் வாழ்ந்துள்ளார் .

இவரைப் பற்றி முத்துபேரிச்சி ஆச்சாரி எனும் ஆசாரி இனத்தவன் நிறைய பாடல்களை பாடியுள்ளதாக தெரிகிறது. இதனால் மகிழ்ந்த அந்த இராமய்யன் எனும் அகம்படிய வெள்ளாளர் இந்த முத்துபேரிச்சி ஆச்சாரி மேல் மிகுந்த அன்புடையவரக இருந்துள்ளார்.

முத்துபேரிச்சி ஆச்சாரி என்பவர் தன் மகன் திருமணத்தில் பல்லக்கு ஊர்வலம் நடத்த விரும்பியுள்ளார். ஆனால் ஆசாரி எனும் விஸ்வகர்மா இனத்தவர் இடங்கை பிரிவை சேர்ந்தவர்கள்.
அந்த நாளிலே இடங்கை பிரிவை சேர்ந்தவர்கள் பல்லக்கு ஏறுவதற்கு அனுமதியில்லை.
ஆகவே தனது ஆசையை வலங்கை பிரிவை சேர்ந்த இராமய்யன் அகம்படிய வெள்ளாளரிடம் கூறியுள்ளார்.

இதற்கு சில காலங்கள் முன்பு தச்ச மேஸ்திரி என்பவர் வீட்டு திருமணத்தில் ஆசாரிமார்கள் பல்லக்க்கு ஏற இதை பொறுக்கமாட்டாத வலங்கையினர் மாப்பிள்ளை மற்றும் இன்னும் சில கம்மாளர்களையும் கொலைசெய்து அவர்கள் தலைகளை எடுத்துப்போய் கடைக்கு கடை திரிந்து காசு வாங்கினார்கள் என்று தெரிகிறது.

இப்படி இடங்கையினர் ,வலங்கையினர் இடையே தீவீரமாக பிரச்சனை இருந்தபோதிலும்

தன் மீது கவி இயற்றிய ஆசாரி மேல் மிகுந்த பாசமாக இருந்த இராமய்ய்யன்
“நல்லது! ஆகட்டும்! நாட்டுப்படை வந்தாலும் வரட்டும்! பல்லக்கிலே பட்டண பிரவேசம் பண்ணி ,கல்யாணம் முடித்து வைக்கிறேன். நீ ஒன்றுக்கும் மலைக்க வேண்டாம்” என்று உறுதி கூறினான்.

கொடுத்த வாக்கின்படியே செய்வதற்காக அந்த ஊர்களிலே உள்ள முக்கியஸ்தர்களை ரகசியமாக அழைத்து இந்த மாதிரி ஆசாரி மகன் கல்யாணத்திற்கு பல்லக்கு ஊர்வலம் நடத்தப்போகிறேன். அதனால் நீங்கள் எந்த பிரச்சனையும் செய்யாமல் இருங்கள் என்று 10 பொன் தந்துள்ளான். ஆனாலும் அந்த கூட்டத்திலே ஒருவன் ஓடிப்போய் வேற்று ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துவிட்டான்.

இந்த செய்தியை கேட்ட அவர்கள் “அப்படியா செய்தி! ஊர்வலம் எப்படி வருகிறதென்று பார்ப்போம்” என்று காத்திருந்துள்ளார்கள்!

இதற்கு பின் இந்த ஓலைச்சுவடியின் செய்தி சிதைந்து விட்டதால் இந்த நிகழ்வை பற்றி விரிவாக அறியக்கிடைக்கவில்லை.ஆனாலும் இராம்மய்யன் அகம்படி வெள்ளாளர் அந்த ஆசாரியின் மருமகளை பல்லக்க்கில் ஏற்றி வெற்றிகரமாக ஊர்வலம் வந்துவிட்டார் என்பதை சுவடியின் முன்பு உள்ள சுருக்க செய்தியில் ::இரண்டொரு கம்மாளர் பல்லக்கில் ஏறினதுண்டு அதெப்படியென்றால்…” என்று கூறி இச்செய்தியை ஆரம்பிப்பதால் அந்த ஆசாரியின் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்று இராம்மய்யன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டார் என்பது தெளிவாக தெரிகின்றது.

சரி இந்த சுவடியின் செய்தி வழியாக அறிகின்ற வேறு பல உண்மைகளை பார்ப்போம்!

இந்த வேதநாயக சாஸ்திரி 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர் திரட்டி அளித்த “வலங்கை சரித்திரம்” எனும் நூலில் இவர் காலத்திற்கு 80 வருடங்களுக்கு முன்பு இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படிய வெள்ளாளர் என்பவர் வாழ்ந்தார் என்று கூறியிருக்கின்றார். இதனால் குறிப்பிட்ட அகம்படிய வெள்ளாளரின் காலம் கி.பி 17ம் நூற்றாண்டு ஆகும்.

இந்நூலில் மேலும் பல்வேறு வரலாற்று செய்திகளை அறிய முடிகின்றது..

அகம்படிய வெள்ளாளர்
அகம்படிய வேளார்,அகம்படி வேளான் என்றும் அகம்படி உடையான் என்றும் ஆயிரம் வருடம் முன்பான பல்வேறு கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே பல்வேறு பதிவுகளில் ஆயிரம் வருடம் முன்பான கல்வெட்டு சான்றுகளில் விளக்கியிருந்தோம்.

வேளான் பட்டம் மட்டுமல்ல வெள்ளாளர் என்ற பதத்தையும் 300 வருடங்களுக்கு முன்பு அகமுடையார்களால் பயன்படுத்தப்பட்டிருப்பது. இந்த சுவடி வழியாகவும் உறுதி செய்யப்படுகின்றது.

சிலர் நமது அகம்படி என்ற சாதிப்பெயருடன் வேளார்,வேளான் என்று வருவது வேளாளாரை குறிக்காது என்பார்கள் ஆனால் அதே ஆட்கள் , கல்வெட்டுக்களில் மூவேந்த வேளான், துவராபதி வேளான் கொடும்பாளீர் வேளிர் அரசனான சிறிய வேளான் மற்றும் வேளான் என்று முடியும் பெயர்களையெல்லாம் வேளாளர் என்று அதனை தங்களுடன் தொடர்புபடுத்துவார்கள்.
நகைமுரண்!

சரி கடந்து போவோம்!

பல்லவராயர் பட்டம்
அதே போல் அகம்படியினருக்கு பல்லவராயர் பட்டமும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்ததை பல்வேறு கல்வெட்டு சான்றுகள் மூலம் காட்டியிருந்தோம். அந்த கல்வெட்டு சான்றுகளுக்கு வலுசேர்க்கும் வண்ணம் இந்த சுவடியில் வரும் சான்று ஆவணமும்
அகமுடையார்களுக்கு பல்லவராயர் பட்டத்தை எடுத்துக்காட்டுகின்றது.

புதுக்கோட்டை பல்லவராயர்கள்
குறிப்பிட்ட தச்சங்குறிச்சி எனும் இந்த ஊர் இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏற்கனவே பல்லவராயர் பட்டத்தில் புதுக்கோட்டையில் ஆட்சி நிறுவிய பல்லவராயர்கள் அகம்படியர்கள் என்பதை நமது அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் ஏற்கனவே பல்வேறு சான்றுகளுடன் விளக்கியிருந்தோம்.

புதுக்கோட்டை பகுதியில் உள்ள தச்சங்குறிச்சியில் பல்லவராயர் பட்டத்தில் உள்ள அகம்படி வெள்ளாளர் எனும் போது இந்த சுவடி வழியாகவும் அந்த கருத்து உறுதி செய்யப்படுகின்றது.

குறிப்பு:
பல்வேறு சான்றுகளை எடுத்துக்காட்டி ஓர் விரிவான காணொளி செய்யலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் வேலை பளு காரணமாகவும் ,நேரமின்மை காரணமாகவும் அதை செய்ய முடியவில்லை.

இன்னும் நிறைய ஆவணங்கள் உள்ளன.தேவைப்பட்டால் பல்வேறு ஆவணங்களை ஒன்றினைத்து விரிவான காணொளியை நாம் வெளியிடுவோம்.

நன்றி
இது போல் “அகம்படி வெள்ளாளர்” எனும் கருத்து கொண்ட சுவடி நூல் “வலங்கை புராணத்தில்” உள்ளதென்றும் தேடிப்பார்க்குமாறும் எனக்கு தகவல் அளித்த அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு எமது நன்றிகள்.

வணக்கங்களுடன்.
அகமுடையார் ஒற்றுமை பக்கம் சார்பாக
மு.சக்தி கணேஷ்

கூடுதல் செய்தி:
அகமுடையார்களில் பல்லவராயர் பட்டம் கொண்டவர்கள்
திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலும் திருச்சி பெல் கம்பெனியை சுற்றி சுமார் கோட்டரபட்டி,மாறநேரி,பொன்விலங்கான்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களில் பல்லவராயர் பட்டத்துடன் இன்றும் வாழ்கின்றனர்.இவர்கள் புதுக்கோட்டை பல்லவராயர் வழிவந்தவர்களின் வாரிசுகள் ஆவர்.

ஆதாரங்கள்- பிற்சேர்க்கைகள்

முதல் 1-6 படங்கள் – இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படி வெள்ளாளர் பற்றி வலங்கை புராணத்தில் இடம் பெறும் செய்திகள்

அகம்படி வேளாண்–தரவுகள் 6-10 படங்கள்
————————–
அகம்படி உடையான் -உத்திரமேரூர் தண்டி வர்மன் கல்வெட்டு -காலம் 8ம் நூற்றாண்டு
அகம்படி முதலிகளில் பெரியனான மலையாழ்வி வேளான் – சுந்தர பாண்டியன் காலத்து கல்வெட்டு -ஆதாரம் புதுக்கோட்டை கல்வெட்டு தொகுதி ,கல்வெட்டு எண் 338
வெண்பாக்கம் உடையார் அகம்படி வேளான் – தென் இந்திய கல்வெட்டு தொகுதி பக்கம் எண் 1889
அகம்படி வேளான் — செவலப்புரை கல்வெட்டு – காலம் கி.பி 14ம் நூற்றாண்டு

இராமய்யன் பல்லவராயர் அகம்படி வெள்ளாளர் – சுவடி காலம் கி.பி 17ம் நூற்றாண்டு – நூல் வலங்கை புராணம்

பல்லவராயர்- தரவுகள் 11-13 படங்கள்
——————————
திருச்சிற்றம்பலமுடையான் தீராத வினை தீர்த்தான் பல்லவராயன் – அகம்படி நியாயம் எனும் துறைக்கு தலைவன் -பல்லவராயன்பேட்டை கல்வெட்டு
வழுத்தூர் அரசு தீராத வீனை தீர்த்த பல்லவராயன் – அகம்படிய வேளாளன் -கி.பி 16ம் நூற்றாண்டு -நூல் அரைய நாட்டு வரலாறு

தொண்டைமானார் அகம்படியர் பல்லவ்வரையன் – கி.பி 13ம் நூற்றாண்டு – மதுரை மாவட்ட கல்வெட்டு தொகுதி 2 கல்வெட்டு எண் 210/2003

அகப்பரிவாரத்து சுந்தரபாண்டிய பல்லவரையன் – கி.பி 13ம் நூற்றாண்டு -விருதுநகர் மாவட்ட கல்வெட்டு தொகுதி 312//2005
சில தரவுகளை பதிவின் போது விட்டுவிட்டோம் அவற்றை கமேண்டில் பதிவு செய்கின்றோம்







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo