அகம்படியாரில் சோழ கங்கன்-புதிய கல்வெட்டு ஆதாரம் ——————————–…

Spread the love

First
அகம்படியாரில் சோழ கங்கன்-புதிய கல்வெட்டு ஆதாரம்
——————————————————–
நேற்றைய நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் கர்நாடகத்தை சேர்ந்த கங்கர்களை பற்றியும் அவர்களுடன் ஏற்பட்ட மணவினை தொடர்பால் அகம்படி எனும் இன்றைய அகமுடையார் சாதியினருக்கு வந்த கங்கன்/கங்கர் பட்டத்தை பற்றியும் பேசியிருந்தோம்.

அப்பதிவிலேயே இதற்கு முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு ஆதாரங்கள் கொடுத்திருப்பினும் அப்பதிவிலேயே இன்னும் அதிக ஆதாரங்கள் விரைவில் கிடைக்கும் என்று சொல்லியிருந்தோம்.

அதே போல் நேற்று நாம் வெளியிட்ட கட்டுரைக்கு மற்றுமொரு கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது. நேற்றைய கட்டுரை குறித்து அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் அகமுடையாரிடம் பேசிக்கொண்டிருந்த போது
சோழ கங்கன் எனும் பெயரில் அகம்படியார் கல்வெட்டு இருப்பதாக தெரிவித்து அதை ஆராய்வதற்காக நம் பார்வைக்கு அனுப்பியிருந்தார் .அதனையே இந்த பதிவில் நாம் காணப்போகின்றோம்.

கல்வெட்டு செய்தி:

திருவக்னீஸ்வர் கோவிலுக்கு அகம்படியாரில் சிங்காந்தி பகுதியை சேர்ந்த சோழகங்க தேவன் என்பவன் நந்தா விளக்கு ஒன்று வைத்துள்ளான் .

அந்த விளக்கு எரியும் எண்ணெய் செலவிற்காக அத்திமல்லனான சம்புவராயன் என்பவன் பல்குன்ற கோட்டத்து (இன்றைய திருவண்ணாமலை செங்கம் ) இஞ்சிபேடு கோவிந்தபுரம் பகுதியில் அரைவேலி நிலமும் , வேறு பகுதியில் நெல் ஆயம் எனும் நெல் விளைவிப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி பணத்தை பயன்படுத்திக்கொள்ள கொடுத்துள்ளான்.

பார்க்க படம் 1,2 (இணைப்பு)

குறிப்பு
நெல் ஆயம் எனும் கல்வெட்டு வரிகளை அடுத்துள்ள எழத்துக்கள் நடுவே சிதைந்துள்ளதால் தானம் குறித்த வேறு செய்திகளை அறிய முடியவில்லை.

இந்த கல்வெட்டு செய்தியில் அகம்படியாரில் சோழ கங்க தேவன் என்று வருவதால் இவன் கங்கர்/கங்கன் பட்டம் கொண்ட அகம்படியர் இனத்தவன் என்பது தெளிவாகிறது.
கல்வெட்டில் வரும் மற்றொருவரான அத்திமல்லன் என்பவர் சம்புவராயர் எனும் அரசபரம்பரையை சேர்ந்த இன்றைய வன்னியர் சாதியை சேர்ந்தவராக இருக்கலாம்.

கல்வெட்டு தொடக்கத்தில் ” திரிபுவன சக்கரவர்த்தியுள் குலோத்துங்க சோழ தேவற்கு” என்ற வரிகள் வருவதால் மேற்குறிப்பிட்ட சம்பவராயர் அரசர் குலோத்துங்க சோழரின் கீழ் ஆட்சிபுரிந்தவர் என்பது தெரிகிறது.

அதே போல் கல்வெட்டில்
“அகம்படியாரில் சிங்காந்தி சோழ கங்க தேவன்” என்பதால் குறிப்பிட்ட அகம்படியரான இவன் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவன் இவன் , சோழ கங்க தேவன் எனும் அடைமொழியால் இவன் சோழ அரசரின் கீழ் பணியாற்றியவன் என்பதும் தெரியவருகின்றது.

மற்ற சோழ கங்கர் பட்டம் கொண்ட அகம்படியினர் சோழர்க்கு அடங்கிய சிற்றரசர் என்பதால் குறிப்பிட்ட இவனும் சிற்றரசராக இருக்க வாய்ப்புள்ளது.மேலும் அகம்படியராயன இந்த சோழ கங்க தேவன் வைத்த நந்த விளக்கு எரிய அத்திமல்லன் சம்புவராயர் நிலங்கள் அளித்திருப்பதால் இவர்கள் இருவரும் பரஸ்பரம் நட்பை பேண செய்து கொண்ட நடவடிக்கையாகவும் சோழ கங்க தேவன் இவருக்கு சமமானவராகவோ அல்லது மேம்பட்டவராகவோ இருக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட சோழ கங்க தேவன் பற்றிய வேறு கல்வெட்டு செய்திகள் வெளியாகும் போது இன்னும் அதிக வரலாற்று உண்மைகள் தெரிய வரும்.

எது எப்படியாக இருந்தாலும் நேற்று அகம்படி இனத்தவரின் கங்கர் மண தொடர்பு குறித்தும் கங்கர்/கங்கன் பட்டம் பற்றிய கருத்தை மேலும் ஓர் கல்வெட்டுச்சான்று இக்கல்வெட்டு செய்தி மூலம் உறுதிப்படுத்த முடிகின்றது.

வரலாறு தேடல் தொடரும்.
கல்வெட்டு கண்டறியப்பட்ட இடம்: தடாகபுரீஸ்வரர் கோவில் முன்மண்டப கிழக்குச்சுவர்.
காலம்: கி.பி 1204 அல்லது 13ம் நூற்றாண்டு
அரசர்: குலோத்துங்கச்சோழர்.

ஆதாரம்:
திருவண்ணாமலை கல்வெட்டு தொகுதிகள் 2
கல்வெட்டு எண் 330/2018
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு

நன்றி:
இக்கல்வெட்டு வரிகளை தேடி நமக்களித்த அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்!

இணைப்புகள்
படம் 1 : கல்வெட்டு குறிப்பு வரிகளுடன் தொல்லியல் துறை வெளியீடு குறிப்பிட்ட முழு பக்கம்
படம் 2 : கல்வெட்டு வரிகள் மட்டும் (தெளிவான ,பெரிய படத்துடன்)

agambadiyaril singanthi chola choza ganga devan thiruvannamalai kalvettukal 330 2018 part1
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

5 Comments
 1. அந்த தேவர் மட்டுமே அகமுடையார் எனும்
  குரூப்களின் கண்ணில்படும் வரை பகிரவும்..

 2. நாம் கட்டுரையில் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் இவர் இளவரசர் நிலையில் இருந்திருக்கலாம் என்றும் சம்புவராய அரசருக்கு இணையாகவோ அல்லது மேம்பட்ட நிலையிலோ இருந்திருக்கலாம் என்று நாம் சொன்னதற்கு புதிய கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது.

  வேறு ஊரில் கிடைக்கபெற்ற கி.பி 1216ம் ஆண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில்
  பிள்ளையார்/இளவரசர் சோழ கங்க தேவன் என்று பதிவாகியுள்ளது.
  ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை வருடம் 1913.

  ஆகவே நாம் சொன்ன கருத்து உறுதிப்படுகிறது. இதுகுறித்து இதே கட்டுரையில் தகவல்கள் நாளை சேர்க்கப்படும்.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?