First
திருமோகூர் நிகழ்வில் மருதுசேனையின் முயற்சிகளுக்கு நன்றியும் – ஊடக செய்திகளை தக்க முறையில் பயன்படுத்துதலும்
————————————–
மதுரை அருகே திருமோகூர் மற்றும் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்ட்டான்பட்டி ஆகிய இரு ஊர்களில் சில தினங்களுக்கு முன் இரு தரப்பு ஏற்பட்ட மோதலில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது பிசிஆர் வழக்கு பதியப்பட்டதையும் அதில் அகமுடையார் இனத்தை சேர்ந்த சில அப்பாவி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் நீங்கள் அறிவீர்கள்!
இந்நிலையில் மருதுசேனை சார்பாக அதன் நிறுவனர் அண்ணன் திரு.ஆதிநாராயணன் அவர்கள்
முதலில் சம்பந்தபட்ட மக்களை நேரில் சென்று பார்க்க சென்றுள்ளார்.அதுவே மிகவும் பாராட்ட வேண்டிய பணி .ஏன் என்றால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது தான் அந்த மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதோடு மாற்று தரப்பினருக்கும் அகமுடையார் சமுதாய மக்களுக்கு அகமுடையார் சமுதாய தலைவர்கள் ஆதரவு உள்ளதும் புரியும்.
அதேநேரம் பிரச்சனை தீவிரமான நேரம் என்பதால் அதை தவிர்க்க காவல்துறை கூறியதை அடுத்து மேலும் பதட்டமடைய செய்ய கூடாது என்று நிலையில் அதை தவிர்த்து காவல்துறையினரை சந்தித்து நடுநிலையுடன் பேசியுள்ள்ளார். அதாவது மோதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த குறிப்பிட்ட சிலர் மீதும் வழக்கு போடுங்கள்! ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றம் சாட்டாதீர்கள்! ஒரு தரப்பினர் மீது மட்டும் வழக்கு போடாதீர்கள் ! என்று நடுநிலையுடன் பேசியுள்ளார். அது மிகவும் பாராட்டத்தக்கது!
அதே போல் ஊடகங்களில் நேர்காணல் அளிக்கும் போதும் அகமுடையார் சமுதாயத்தை மற்றவர்கள் குற்றம் சாட்டிவிடாதவகையிலும் மோதலை தவிர்க்கும் நோக்கிலும் நடுநிலையாகவும், நிதானமாகவும் பேசியுள்ளார்.
சில விசயங்களை பொதுவெளியில் அப்படியே பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால் இப்பிரச்சனையை மருதுசேனை நிறுவனர் அண்ணன் ஆதிநாராயணன் அவர்கள் மிகவும் திறமையாக கையாண்டுள்ளார் என்பதை மட்டும் அகமுடையார் சமுதாய மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதற்காக அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக அண்ணன் ஆதிநாராயணன் அவர்களுக்கு நன்றிகளை அகமுடையார் ஒற்றுமை தெரிவித்துக்கொள்கின்றது.
அதேநேரம் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், காவல் துறையினர்,நீதி துறையை சேர்ந்தவர்கள் ,அரசியல் பிரமுகர்கள் இவ்வழக்கு விடயங்களை கண்காணித்து தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆதரவினை பாதிக்கப்பட்ட அகமுடையார் சமுதாய மக்களுக்கு வழங்கிட கேட்டுக்கொள்கின்றோம்!
தாமதமாக செய்தி வெளியிடுவது பற்றி — ஓர் விளக்கம்
————————————–
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை தீவிரமாக கண்காணித்து அகமுடையார் சமுதாயம் பற்றிய செய்திகள் வெளியானால் (அது நல்ல விசயமோ அல்லது நமக்கு எதிரானதோ) அதை அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனில் வழங்கி வருகின்றோம்.
அவ்வகையில் திருமோகூரில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கடந்த 4ம் தேதியே “வினவு” என்ற தனியார் இணையதளம் வழியே அறியப்பெற்றோம். விழுப்புனர்வாக இருக்க வேண்டும் என்பதற்காக தனியார் இணையதளத்தில் வெளியான இச்செய்தி குறித்த லிங்கை அகமுடையார் ஒற்றுமை “ஊடக செய்திகள் ” பிரிவில் வழங்கினோம் (பார்க்க படம் 1)
அதேநேரம் இச்செய்தியை பேஸ்புக்கில் வெளியிட்டு பொதுவெளியில் அதன் கவனத்தை ஈர்த்து விடயம் நமக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது என்பதால் அதை அகமுடையார் ஒற்றுமையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடவில்லை.
பரபரப்பாக பேச வைப்பதாலேயே பல நேரங்களில் பல விடயங்களில் நமக்கு எதிராக போய்விடுவதுன்டு.
எப்போதுமே வீரியத்தை விட காரியமே முக்கியம்! மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதினாலோ , நமக்கு எந்த வித உதவியோ ஆதரவோ கிடைக்க போவதில்லை .மாறாக நமக்கு எதிராக சில நேரங்களில் மாறி விடுவதுண்டு.
ஆதே நேரம் ஊடகங்களை தீவிரமாக கண்காணித்து செய்தி வழங்குவதன் நோக்கம்: பாதிக்கப்பட்ட நம் சமுதாய மக்களை பற்றிய செய்தியை ,சமுதாய தலைவர்கள், சமுதாய அமைப்புகள், சமுதாயத்தில் உள்ள வழக்கறிஞர்கள், காவல் துறையினர் பார்வைக்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவியும், ஆதரவும் கிடைக்க செய்வது தான்! ஆகவே அகமுடையார் சமுதாய தலைவர்கள் ,நிர்வாகிகள் ,சமுதாய ஆர்வலர்கள் அகமுடையார் ஒற்றுமையின் “ஊடக செய்திகள் ” வசதியை தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
சரி அகமுடையார் ஒற்றுமையின் ஊடக செய்திகளை பார்ப்பது எப்படி?
—————————————–
அகமுடையார் ஒற்றுமையின் ஊடக செய்திகள் தொகுப்பை பார்க்க முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோர் சென்று அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
டவுன்லோட் செய்த பின்பு
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை ஓப்பன் செய்து “Categories”
என்ற டேப்பை கிளிக் செய்யவும்! (பார்க்க படம் : 2
இப்போது “செய்திகள்” என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும். (பார்க்க படம் : 3
அடுத்து “ஊடக செய்திகள்” என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும் (பார்க்க படம் : 4
இப்போது பல்வேறு செய்தி தலைப்புகள் தோன்றும் அதில் நீங்கள் படிக்க விரும்பும் செய்தியை தேர்ந்தெடுத்து செல்லவும். (பார்க்க படம் : 5
இப்போது இந்த செய்தியின் தலைப்புக்கு கீழே
“முழுச்செய்தியை படிக்க மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்” என்று குறிப்பிட்டு
பச்சை அல்லது புளூ நிறத்தில் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். ( பார்க்க படம் : 6)
அதை கிளிக் செய்து சம்பந்தப்பட்ட செய்தி இணையதளத்தில் இச்செய்தியை நீங்கள் படிக்க முடியும்.
வேறு ஓர் செய்தியை படிக்க விரும்பினால் , ஏற்கனவே ஒப்பன் செய்துள்ள அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனின் ஊடக செய்திகள் பிரிவில் சென்று வேறு செய்திகளை பார்க்கலாம்.
உங்களுக்காக இப்பதிவில் ஸ்கீர்ன்சாட் அட்டாச் செய்து அதில் வட்டமிட்டும் இந்த வழியை ஒவ்வொன்றாக காட்டியுள்ளாம்)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்