கடைசி சோழ மன்னர் நலமுடன் இருக்க புவனசிங்க தேவன் நிர்மாணித்த பிள்ளையார் கோவில்
—————————–
சோழ அரசின் கடைசி வாரிசு புதுக்கோட்டை பகுதியில் வாழ்ந்து வந்தார். சேமப்பிள்ளையார் ,அரசுகண்ட ராமன் , திருவம்பலபெருமாள் என்ற பெயர்களில் கல்வெட்டுக்களில் அழைக்கப்படும் இவர் சோழநாட்டை ஆண்ட கடைசி சோழ அரசனான மூன்றாம் இராசேந்திரனின் மகனுமாவார்.
புதுக்கோட்டை பகுதியில் பாண்டியர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்ட சோழ இளவரசர் சேம பிள்ளையார் சிறுகோட்டை ,அரண்மனை இவற்றோடு நில உரிமைகள் இவற்றை பெற்றிருந்ததை கல்வெட்டுக்கள் கூறும் செய்தியை கொண்டு அறிய முடிகின்றது.
இந்நிலையில் புவனசிங்க தேவன் எனும் அகம்படியர் இனத்தவன் குறிப்பிட்ட சோழ இளவரசரின் சார்பாக நிர்வாகத்தை கவனித்து வந்ததை 10க்கும் மேற்பட்ட இவனது கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
நீதிவழங்குதல் ,தானங்கள் பற்றிய 10க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் புவனசிங்க தேவனின் புகழை எடுத்துரைக்கின்றன.
புவனசிங்க தேவன் தன் பெயரில் தானம் வழங்கியது மட்டுமின்றி சோழ அரசன் சேமப்பிள்ளையார் நலமுடன் இருக்க வேண்டி பல்வேறு தானங்களை வழங்கியுள்ளதையும் பல்வேறு கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
இப்பதிவில் நாம் காணும் கல்வெட்டு செய்தியும் அப்படிப்பட்ட ஓர் கல்வெட்டு செய்தியாகும்.
திருவரங்குளம் எனும் புகழ் மிக்க ஊர்
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
இக்கோவிலில் கண்டறியப்பட்ட பாண்டியர் மெய்கீர்த்தியுடன் துவங்கும் கி.பி 14ம் நூற்றாண்டு தொடக்க காலத்திய கல்வெட்டு செய்தியின் மூலம்
சேமபிள்ளையார் நலமுடன் இருக்க வேண்டி புவனசிங்கதேவன் எனும் அகம்படிய இனத்தவன்
திருவரங்குளமுடைய நாயனார் கோவிலில் விநாயகப்பிள்ளையார் திருக்கோவிலையும், சோபானம்( அச்சன்னதிக்கு செல்ல படிக்கட்டுக்களையும்) , தூபி (கோபுரம் ) போன்றவற்றை அமைத்துள்ளான் என்பது தெரியவருகின்றது.
ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டு தொகுதி ,கல்வெட்டு எண் 436
சோழ இளவரசன் மேல் புவனசிங்க தேவன் கொண்ட அன்பை அவர் பெயரில் இவன் ஏற்படுத்திய வேறு சில தானங்கள் பற்றிய கல்வெட்டு செய்திகளும் எடுத்துக்காட்டுகின்றன.
(அவற்றை வரும் காலங்களில் காண்போம்).
இன்னும் சொல்லப்போனால் சோழ இளவரசர் வெளியிட்ட கல்வெட்டுக்களை விட புவனசிங்க தேவனே அதிகம் கல்வெட்டுக்களில் அதிகாரம் மிக்கவராக காட்டப்படுகின்றார்.
சோழ இளவரசர் சேமப்பிள்ளையாரை விட புவனசிங்க தேவனை அதிகம் குறிப்பிடும் இவன் பெயரால் இவன் வழங்கிய தானம் பற்றிய கல்வெட்டு செய்திகள், நீதி வழங்குதலில் ஈடுபட்டது, சேமப்பிள்ளையார் நலமுடன் இருக்க வேண்டி சேமப்பிள்ளையார் பெயரில் புவனசிங்க தேவன் செய்த தானங்கள் போன்றவை சோழ இளவரசர் குடும்பத்திற்கு இவன் மிகவும் நெருக்கமானவன் என்பதை காட்டுகின்றன. சோழர் அகம்படியர் இனத்தவர் என்பதை முன்னரே விளக்கியுள்ளோம் ,இச்செய்தியையும் பார்க்கும் போது புவனசிங்க தேவன் , சோழ இளவரசனின் நெருங்கிய உறவினனாகவே இருக்க வேண்டும்.
(இதை வரும் நாட்களில் விரிவாக விளக்குவோம்).
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ஆறகளூர் வாணகோவரையர் நலன் பெற அகமுடையார் பெரிய பெருமாள் பாண்டியராயன் என்பவர் கோவில் நந்தா விளக்கு எரிக்க நில தானம் தந்துள்ளார்