First
மாணவி பவானிக்கு ரூ20,000 நிதிவழங்கப்பட்டது
————————————-
கடந்த 7ம் தேதி(07-06-2023) அன்று தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில்
இராமநாதபுரம் மாவட்டம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும் கொங்கு பகுதியில் வசித்து வந்த மறைந்த திரு பூவலிங்கம் அவர்களின் புதல்வி பவானி அவர்கள்
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் இடமும் தான் படித்த அரசு பள்ளியில் முதல் இடமும் பிடித்திருந்தார். தந்தையை இழந்த அவரின் மேற்பபடிப்புக்கு தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ20,000 உதவி தொகையும் வழங்கப்பட்டது..
புகைப்படங்கள் மற்றும் தகவல் உதவி: மோ.இராஜசேகர்(எ) திலீப் அகமுடையார்
மாநில இளைஞர் அணி செயலாளர்
தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம்
(இவர் மாணவிக்கு உறவினர் என்பதும் ,இம்மாணவி பற்றிய செய்தி இவர் மூலமே நாம் அறிந்துகொண்டு அகமுடையார் ஒற்றுமையில் பதிவு செய்தோம் என்பது குறிப்பிடத்தக்கது )
நாம் அறிந்தவரை நம் சமூகத்தவர் சார்பில் ( நிதி வந்த தேதி வரிசைப்படி)
அண்ணன் திரு. அருள் அகமுடையார் (சிதம்பரம்) ரூ1000
அண்ணன் திரு. சரவணன் அகமுடையார் (அமெரிக்கா) அவர்கள் ரூ10,000
திரு.முத்துக்காளை அகமுடையார் (சென்னை தொழிலதிபர் ) அவர்கள் ரூ 15,000 (மருதிருவர் கல்வி மையம் திரு.மருதமுத்து அவர்கள் வழியாக )
தற்போது தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம்சார்பில் ரூ20,000
என மாணவி பவானி அவர்களின் மேற்படிப்பிற்கும் , விடுதி ,உணவு செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் அகமுடையார் ஒற்றுமை சார்பாக நன்றிகள்!
அகமுடையார் சமுதாயத்தில் உண்மையான சமுதாய உணர்வோடு செயல்படுவர்கள் குறைவாக இருந்தாலும் இந்த குறைவான எண்ணிக்கையில் இருப்பவர்களே இவ்வளவு நிறைவான பணியை செய்ய முடியுமென்றால் இந்த இனத்தில் உள்ள மற்றவர்களும் சமுதாய உணர்வோடு செயல்பட்டால் வெற்றியடையாலாம் என்றால் அது மிகையில்லை.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்