மதுரை ஆதீனத்தை நிறுவிய திருஞானசம்பந்த பெருமானின் குருபூசையை முன்னிட்டு,
மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிவபக்தியை போற்றும் வண்ணம் அவர்களுடைய திருப்பெயரால் வருடந்தோறும் விருது வழங்கி வருவது நாம் அறிந்ததே !!
அதன்படி இவ்வருடம் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சார்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் திரு மீ.சிவசண்முகம் அவர்கள் மருதரசர்களின் திருப்பெயரால் வழங்கப் பெற்ற விருதை வென்றிருக்கிறார் !
நேற்று( 2/6/23) நடைபெற்ற விழாவில் குருமகா சன்னிதானத்தின் திருக்கரங்களால் விருது பெற்ற அன்பருக்கு நமது சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழுவின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார் !
மேலும் மருதரசர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக ஆதாரங்களுடன் சொல்லும் திரு மீ.மனோகரனின் “மருதுபாண்டிய மன்னர்கள்” புத்தகத்தை பரிசளித்தோம் !
மருதுபாண்டியர்களின் மரபில் வந்த உங்களால் கௌரவிக்கப் பெறுவதும்,பரிசு பெறுவதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,
என்னுடைய சொற்பொழிவுகளில் இனி கண்டிப்பாக மருதரசர்களின் வரலாற்றை எடுத்துரைப்பேன் என்றும் அச்சிவத்தொண்டர் நம்மிடம் மனமகிழ்ந்து கூறினார் !
விருதோடு மதுரை ஆதீனம் அளித்த விருந்தையும் சிறப்பித்து விடைபெற்றோம்…
எல்லாப்புகழும் மருதரசர்களுக்கே…
புகைப்படங்கள் மற்றும் பதிவு: திரு தீபக் குமார் அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்