புதுக்கோட்டையில் கிடைத்த அரிய ஆசிரியம் கல்வெட்டு ——————————…

Spread the love

First
புதுக்கோட்டையில் கிடைத்த அரிய ஆசிரியம் கல்வெட்டு
————————————-
இப்பதிவில் காண இருப்பது அரிய ஆசிரியம் கல்வெட்டு ஆகும். ஆம் ஏன் அரிய கல்வெட்டு என்கிறோம் என்றால் இதுவரை தமிழ்நாட்டில் 30,000க்கு மேல் கல்வெட்டுக்கள் கிடைத்திருந்தாலும் அதில் இதுவரை 70 கல்வெட்டுக்களே ஆசிரியம் கல்வெட்டுக்களாக இருக்கின்றன.

சரி ஆசிரியம் கல்வெட்டு என்றால் என்ன?

ஆசிரியம் என்பது புகலிடம் அல்லது பாதுகாப்பு தருவது என்று பொருளாகும். சத்திரியர்களின் உயர்ந்த தர்மாகிய ஆசிரியம் தருதலைப்பற்றி பேசுகின்ற கல்வெட்டுக்களே ஆசிரியம் கல்வெட்டு என்று கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

குறிப்பிட்ட அரசனால் பாதிக்கப்பட்டவர்கள், எதிரிகளுக்கு அஞ்சியவர்கள் , ஆதரவற்றவர்களை காக்கும்படியாக ஆசிரியம் எனும் புகலிடம் அளிக்கும் தகவல்களை குறிப்பதாகவும் , குறிப்பிட்ட ஊரினை பாடிகாவல் செய்யும் உரிமையினை பெற்றவர் என்பதை அறிவிக்கும் முகமாகவே ஆசிரியம் கல்வெட்டுக்கள் செயல்படுகின்றன.

இது அறிவிப்பு செய்திகள் என்பதால் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகள்,கோவில், ஊர் மன்று இருந்த இடங்களில் இந்த ஆசிரியம் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு இருந்ததை அறிய முடிகின்றது.

இப்பதிவ்வில் நாம் காணப்போகும் கல்வெட்டு இன்றைய புதுக்கோட்ட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள திருக்கட்டளை எனும் ஊரில் உள்ள சுந்தரமகாளி அம்மன் கோவில் முன்பாக கிடைத்துள்ளது.

கல்வெட்டு வரிகள்

“ஸ்வஸ்தி ஶ்ரீ
இவ்வகம்ப
டியன் அக
த்தியான் பி
ள்ளை நாடா
ழ்வான் ஆசி
ரியம்”

என்ற கல்வெட்டு வரிகள் காணப்படுகின்றன. அதாவது
அகத்தியான் எனும் பெயரும் பிள்ளை என்ற பட்டமும் கொண்ட அகம்படி இனத்தை சேர்ந்தவன் இப்பகுதி மக்களுக்கு பாதுகாவல் வழங்கியுள்ளதை இக்கல்வெட்டு செய்தி மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது.

இக்கல்வெட்டின் நாயகனுக்கு நாடாழ்வான் என்ற பட்டம் இருந்துள்ளதை கவனிக்கும் போது இவன் இப்பகுதியில் ஊர் தலைவராகவோ குறுநில தலைவனாகவே இருந்திருக்க வேண்டும் என அறிய முடிகின்றது. ஏனென்றால் இக்கல்வெட்டின் காலமான கி.பி14ம் நூற்றாண்டு என்ற காலத்தில்
நாடாள்வான் என்ற பட்டத்தில் பல்வேறு இனக்குழுத்தலைவர்கள் அந்நாளில் புதுக்கோட்டை, இராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட பாண்டிய நாட்டுப்பகுதியில் அதிகாரம் செழுத்தியதை அக்காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஏற்கனவே சொன்னபடி தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமே 70-80 ஆசிரியம் கல்வெட்டுக்களே கிடைத்துள்ளன. அதிலும் 4-5 ஆசிரியம் கல்வெட்டுக்கள் அகம்படி இனத்தவர்கள் ஆசிரியம் அளித்ததை பற்றி குறிப்பிடுகின்றன. இவற்றை வரும் காலங்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இணைப்பு: ஆதாரம்: ஆவணம் இதழ் 28 , பக்கம் 134இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. நாடாழ்வான் பட்டத்தை பயன்படுத்திய வேறுசில சாதிகள் யார்யாரென என்பது பற்றியும் இணைத்து கூற வேண்டுகிறேன்.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?