• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

#பைந்தமிழ் சித்தர் பா.வே. மாணிக்க நாயக்கரின் (அகமுடையார்) பிறந்த தினம் இன்று!! ப…

February 2, 2022 by administrator Leave a Comment

Spread the love

#பைந்தமிழ் சித்தர் பா.வே. மாணிக்க நாயக்கரின் (அகமுடையார்) பிறந்த தினம் இன்று!! போற்றி வணங்குகிறோம் 🙏

மறைக்கபட்ட மாமனிதர் #பாகல்பட்டி_ஜமீன்தார் #அகமுடையார் வழித்தோன்றல் பா.வே.மாணிக்க நாயக்கர் இவர் சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் வேங்கடசாமி நாயக்கருக்கும் முத்தம்மையாருக்கும் 02.02.1871 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

அகமுடையார் பேரினத்தில் நாயக்கர் பட்டம் பெற்ற இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே கவிபாடும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார் சேலம் கல்லூரியில் சேர்ந்து இளங்கலையில் எப்.ஏ பட்டம் பெற்றார் அவருடைய பொறியியல் நுட்ப ஆர்வத்தை அறிந்த கல்லூரி முதல்வர் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு உதவினார்.

அங்கு முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுப் பல பரிசுகளும் தங்க பதக்கமும் பெற்றார் சென்னை அரசாங்கத்தில் நீலகிரி உதவிப் பொறியாளராக 1896 ஆம் ஆண்டு பணியேற்றார்…!!!

செயற்பொறியாளராக 1906 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார் இங்கிலாந்துக்கு 1912 ஆம் ஆண்டு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் வலுவாக்கிய கான்கிரீட் பற்றியும் ஆய்வு செய்தார்.

மேலும் ”கால்குலோகிராப்” என்ற கருவியை உருவாக்கி அதை பொறியியல் உலகத்துக்கு அளித்து சாதனை புரிந்தார்.

தயாகம் திரும்பிய பின்னர் 1915 ஆம் ஆண்டு சென்னை பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு பொறியியல் கல்வியைத் திறம்பட அளித்தார் பொதுப்பணித் துறையில் 1919 ஆம் ஆண்டு செயற்பொறியாளராகப் பதவி ஏற்றார் அத்துறையில் கண்காணிப்புப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றவர் பின்னர் 1927 ஆம் ஆண்டு அரசுப்பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்.

பொறியியலைத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் விலங்கியல், வானவியல்,நிலவியல்,மெய்ப் பொருளியல் முதலிய துறைகளிலும் சிறப்புடன் விளங்கினார்.

தமிழ், தெலுங்கு, வடமொழி ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் மேலும் தையற்கலை, தச்சுக்கலை, ஓவியக்கலை, இசை முதலிய பல கலைகளிலும் பயிற்சி உடையவராகவும் விளங்கியதால் இவரை ஒர் ”பல்கலைக் கழகம்” என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்…!!!

தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page

Source

தொடர்புடைய செய்திகள்:

உயிர் விட இருக்கும் அரசனும்-தன் உயிரை மாய்த்துக்கொள்ள மனைமகன் (அகமுடையார்) தயாரா...
தளம் நிறுத்தப்படுகிறது
சேர்வை கொண்டை-மறந்து போன அகமுடையார் அடையாளங்கள்!
இன்று (24 ஆகஸ்ட்) பிறந்தநாள் காணும் அகமுடையார் அரசியலின் நம்பிக்கை நட்சத்திரம், ...
ஒரே குறிப்பில் இரு வரலாற்று உண்மைகள்! ------------------------------------------...
#அகமுடையார்_மண்டகப்படி #வேலூர் மாவட்டம்... #திருவலம் ஆதாவது.. வாணாதிராயனின் தலைம...
#அகமுடையார்_மண்டகப்படி #வேலூர் மாவட்டம் இரங்காபுரம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சு...
Real Mraning Of Agambadiyar Caste Name
எனதருமை அகமுடையார் சகோதர சகோதரிகளே (அகமுடையச்சிகளே) வருக! வருக! இன்றைய குருபூஜை...
வேலூர் #அகமுடையார் கோட்டையாம் தோட்டப்பாளையத்தில் #அருள்மிகு_ஸ்ரீ_அபயாம்பிகை உடன...
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
திருச்சி நிகழ்வின் முத்தாய்ப்பான சரித்திர நாடகம்- மருதுபாண்டியர் பிரகடணம் வெளியி...

Filed Under: Uncategorized Tagged With: போர்குடி அகம்படியர்

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar