• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

மருதுபாண்டியர் காலத்து மதுரை கோவிலின் அரிய ஓவியமும் அது சொல்லும் உண்மை நிகழ்வும…

July 15, 2017 by administrator Leave a Comment

Spread the love

மருதுபாண்டியர் காலத்து மதுரை கோவிலின் அரிய ஓவியமும் அது சொல்லும் உண்மை நிகழ்வும்
————————————————————–
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மரணத்திற்கு பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த சகோதர யுத்தத்தில் டெல்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் கஃபூரின் துணையை நாடினார் ஆனால் இந்த அந்நியப் படைகள் கி. பி. 1310-11ல் மதுரையைக் கைப்பற்றி சூறையாடின. கோவில்கள் இடிக்கப்பட்டன ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.

பாண்டி மண்டலம் முற்றிலும் அழிவுபட்டு மக்கள் மதுரையை விட்டு காணாமல் போனபோது, முஸ்லீம்கள் பெரும் எண்ணிக்கையில் பாண்டிய நாட்டில் புகுந்து முஸ்லீம்களின் ஆட்சியை ஏற்படுத்தினர். கி.பி 1335 தொடங்கிய முஸ்லீம்களின் ஆட்சி தொடர்ந்து 40 ஆண்டுகள் நீடித்தது.

விஜயநகர இளவரசன் குமார கம்பணன் கி.பி. 1370இல் மதுரைமீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.இந்துக்கள் மீண்டும் தலைநகர் மதுரைக்குத் திரும்பினர்.கோவில்கள் மீண்டும் கட்டப்பட்டன.பூசைகள் தொடங்கின.

1370ல் குமார கம்பண்ணர் மதுரையைக் கைப்பற்றி முஸ்லீம்கள் ஆட்சியை ஒழித்த போதும் முடிகின்ற இடங்களில் முஸ்லீம்கள் தங்கள் மேலாண்மையை நீடித்து வந்தனர்.

இது எந்த அளவு நீடித்தது என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள இடத்தில் முஸ்லீம்கள் தொடர்ந்து தங்கள் பூசையை தொடர்ந்துள்ளனர்.
விஜயநகர அரசர்கள்,நாயக்க மன்னர்கள் என்று பல்வேறு ஆட்சியாளர்கள் மாறிய பின்னரும் சுமார் 400 ஆண்டுகள் இது தொடர்ந்துள்ளது.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாமன்னர் மருதுபாண்டியர்கள் பல்வேறு கொடைகளை வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே!
ஒருநாள் கோவிலுக்கு தரிசனத்தின் பொருட்டு கோவிலுக்கு வரும்போது கோவிலின் வெளிப்பிரகாத்தில் அமைந்துள்ள தெற்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் முஸ்லீம்கள் கோவில் மண்டபத்தின் மேல் மசூதி போன்ற டூம் வடிவத்தை கட்டிக்கொண்டு குரானை ஓதிக்கொண்டு இருந்தனர்.

இதனைக் கண்டு சினம் கொண்ட மருதுபாண்டியர், தான் கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்து வருவதற்குள் இடத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் இல்லையேல் கடும் விளைவுக்கு ஆளாவீர் என்று எச்சரித்தார். ஆம் மருதுபாண்டியர் தரிசனம் முடித்து வருவதற்குள் குறிப்பிட்ட அந்த இஸ்லாமியர் அந்த இடத்தை காலி செய்துவிட்டு ஓடியிருந்தனர்( இந்த நிகழ்வு மதுரைத் தலவரலாறு புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ளது)

இஸ்லாமியரை கோவிலை விட்டு காலி செய்ய வைத்ததோடு அவர் கடமை முடிந்துவிட்டதாக மருதுபாண்டியர் நினைக்கவில்லை ,சமயப்பொறை மிக்க அவர் ,குறிப்பிட்ட இஸ்லாமியர் இறைவழிபாடு நடத்த மதுரை தெற்குவெளி வீதியில்(இன்றைய சப்ப்பானி கோவில்) அருகில் இடம் வழங்கி வணக்கஸ்தலமும் ஏற்படுத்தி தந்தார். அதுவே மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள மினர்வா நூர்தின் பள்ளிவாசல் ஆகும்.இப்பள்ளிவாசலில் அமைந்திருந்த இம்மண்டமும் இதற்கு சாட்சியாக நிற்கின்றது.பார்க்க: படம் 2,3

இஸ்லாமியருக்கு பல கொடைகளை தாராளமாக வழங்கிய மருதுபாண்டியர் ஒருவர் மதவிவகாரங்களில் மற்றவர் தலையிடல் ஆகாது என்ற கருத்தில் உறுதியாகவும் கண்டிப்பாகவும் இருந்துள்ளார் என்று தெரிகிறது.
இஸ்லாமியருக்கு மருதுபாண்டியர் வழங்கிய நன்கொடைகள் (முழுத் தகவல் படங்களுடன்) -லிங்க் கீழே

இப்போது இக்கட்டுரையின் தலைப்பில் குறிப்பிட்ட அரிய ஓவியப் படத்தகவலுக்கு வருவோம்! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் முஸ்லீம்கள் தங்கள் டூம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வழிபட்டு வந்தனர் என்று குறிப்பிட்டோம் அல்லவா அதனை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படம் 1ல் காணலாம்.

ஆம் .இந்த அரிய புகைப்படம் தாமஸ் டேனியல் என்ற ஓவியக் கலைஞரால் 1798ல் வரையப்பட்டது.ஆம் மருதுபாண்டியர்களின் சமகாலத்தில் வரையப்பட்டுள்ளது.இந்த ஓவியத்தில் கோவிலின் கோபுரம் எதிரே அமைந்துள்ள மண்டபத்தின் உச்சியில் முஸ்லீம் பள்ளிகளின் வடிவமைப்பை கவனிக்கலாம்.
மருதுபாண்டியர்களின் சமகாலத்தில் மருதுபாண்டியர்களின் மதுரை நிகழ்வை நினைவுபடுத்தும் சாட்சியாக இது இருக்கின்றது என்ற வகையில் இது ஓர் அரிய ஓவியம் ஆகும்.ஆம் இன்று நீங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்றாலும் கூட இந்த அமைப்பை காணமுடியும்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மருதுபாண்டியர்கள் செய்த கொடைகளைப் பற்றி அறிய விரும்புபவர்கள் இப்பதிவின் நான்காவது புகைப்படத்தில் இருந்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.
5,6-மதுரை கோவிலில் மருதுபாண்டியர்கள் அமைத்த சேர்வைக்காரர் மண்டபம்
7-மண்டபத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலை
8-கோவிலுக்கு மருதுபாண்டியர்கள் வழங்கிய 1008 விளக்குகள் கொண்ட திருவாச்சி விளக்குகள்

நன்றி: நூல்: மருதுபாண்டிய மன்னர்கள்,ஆசிரியர் மீ.மனோகரன்

கூடுதல்:
இந்நிகழ்வு குறித்து ஓர் வார இதழ் ஒன்றிக் கட்டுரையாக ஓவியத்துடன் கட்டுரை வரையப்பட்டிருந்தது! பல ஆண்டுகள் முன்பு என்பதால் இந்நிகழ்சிக்கான அக்கட்டுரையை தவற விட்டுவிட்டேன்.அது குறித்து இன்றும் கூட வருத்தம் உண்டு!






Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

#கிருபாநந்த_வாரியாருக்கு ( செங்குந்தர்) அரசு விழா எடுக்க வைத்தவர்.. #SRK_அப்பு (...
விருதுநகரில் அகமுடையார்கள்- விருதுநகர்,சிவகாசியின் பூர்வீக குடிகள் யார்?-அகமுடையாரில் ஒரு
#அகில_இந்திய_அகமுடையார்_மகாசபை நிறுவனர் உயர்திரு பொன்.கரு. ரஜனிகாந்த் அகமுடையார்...
வீரவணக்கம்!
அகமுடையார் அப்பன் பெயரை திருடும் காமிண்டன் யூடிப் படம் ------------------------...
#சிந்தகணவாய்_அகமுடையார்கள்( கமலாபுரம், கவுரவாபேட்டை) #ராய_வேலூரில் ..அக் 24 அன்ற...
#ரங்காபுரம்_மலைநாட்டு_அகமுடையார்கள். ராய வேலூர் மண்..
ஆரணி அடுத்த #அகமுடையார் கோட்டையான #இரும்பேடு (பழங்காமூர்)கிராமத்தில் #பல்லவ கால ...
#வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த #விளாப்பாக்கம் அகமுடையார் சமுதாயம்... விழிப்ப...
உறவுகளுக்கு ஓர் நற்செய்தி: அனைத்து அகமுடையார் சங்கங்களின் பதிவுகளையும் ஒரே இடத்...
நாளை திருப்பத்தூரில் -வீரம் விதைக்கப்பட்ட மண்ணில் சந்திப்போம் உறவுகளே! படம்: 201...
#குருபூஜைக்கு இன்னும் 88 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார்பெரும்பான்மை...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar